What is the Pass Mark in TNPSC GROUP 4
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 4 தேர்வில் குறைந்தபட்ச தகுதி மதிப்பெண் (Minimum Pass Mark) எவ்வளவு என்ற கேள்வியை தேர்வாளர்கள் சமூக வலைத்தளங்களில் அதிகமாக தேடுகிறார்கள்.
அரசுத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடத்தப்படும் தேர்வில் குரூப் 4 தேர்வு மிகவும் பிரபலமானது இந்த தேர்வுக்கு குறைந்தபட்சம் ஒவ்வொரு முறையும் 20 லட்சம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பம் செய்கிறார்கள்.
குறைந்தபட்ச கல்வி தகுதி 10ம் வகுப்பு என்பதால் அதிகமான நபர்கள் விண்ணப்பம் செய்கிறார்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் சில தேர்வுகளுக்கு கல்வி தகுதிகளில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகிறது.
அதாவது சில தேர்வுகளுக்கு பொறியியல், பொருளாதாரம், சட்டம், விலங்கியல், தாவரவியல்,போன்ற படிப்புகள் கட்டாயம் என கேட்கப்படுகிறது ஆனால் இந்த GROUP-4 தேர்வுக்கு 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருந்தால் போதும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அதிகமான நபர்கள் விண்ணப்பம் செய்கிறார்கள் மேலும் இந்த தேர்வு தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் நடத்தப்படுகிறது மிகவும் எளிமையான தேர்வு என்பதால் அதிக இளைஞர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள்.
முக்கியமாக இந்த தேர்வின் பாடத்திட்டம் 6ம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள பாடப் பகுதிகளில் இருந்து கேட்கப்படுகிறது இதுபோன்ற பல்வேறு காரணங்களால் இந்த தேர்வுக்கு அதிகமான நபர்கள் விண்ணப்பம் செய்கிறார்கள்.
TNPSC GROUP 4ல் தேர்ச்சி மதிப்பெண்
தமிழில் 100 வினாக்கள் கேட்கப்படுகிறது ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படுகிறது மொத்தம் 150 மதிப்பெண், அதேபோல் பொதுதாள் 100 வினாக்கள் கேட்கப்படுகிறது ஒவ்வொரு வினாவிற்கும் 1.5 மதிப்பெண் வழங்கப்படுகிறது மொத்தம் 150 மதிப்பெண்.
இரண்டும் சேர்ந்து 300 மதிப்பெண்கள் எவ்வளவு மதிப்பெண்கள் தேர்வாளர்கள் பெற்றால் தகுதியானவர்கள் என்பதை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது அதாவது TNPSC குரூப் 4க்கான தகுதி மதிப்பெண்கள் 40% அல்லது 60 மதிப்பெண்களுக்கு சமம் (The Qualifying Marks for TNPSC Group 4 is Equivalent to 40% or 60 Marks).
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |