TNPSCல் மறந்து போன User ID மற்றும் Password எப்படி கண்டுபிடிப்பது..!How to Recover Lost User ID and Password in TNPSC

How to Recover Lost User ID and Password in TNPSC

TNPSCல் மறந்து போன User ID மற்றும் Password எப்படி கண்டுபிடிப்பது..!

தமிழ்நாட்டில் உள்ள அரசு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழக அரசு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) என்ற அமைப்பை உருவாக்கியுள்ளது, இந்த அமைப்பு அரசின் கீழ் தனியாக சுதந்திரமாக செயல்பட்டு வருகிறது.

ஒவ்வொரு ஆண்டும் அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை கணக்கிட்டு அதற்கு ஏற்ப தேர்வுகளை நடத்தி திறமையான நபர்களை தேர்ந்தெடுக்கிறது இந்த தேர்வாணையத்திற்கு தனியாக https://apply.tnpscexams.in/ https://www.tnpsc.gov.in என்ற இணையதளங்கள் உள்ளது இதன் மூலம் புதிதாக தேர்வு எழுத வரும் நபர்கள் தங்களுக்கான ஒரு கணக்கை உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

இதில் ஏற்கனவே தேர்வு எழுதிய நபர்கள் தங்களுக்கு என ஒரு கணக்கை உருவாக்கி உள்ளார்கள்,இதை ஒவ்வொரு ஆண்டுக்கும் ஒரு முறை புதுப்பிக்க வேண்டும் இதில் லட்சக்கணக்கான நபர்கள் தங்களுக்கு என ஒரு ஐடியை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.

ஆனால் சில நேரங்களில் அந்த User ID and Password போன்றவை மறந்து விடுகிறது அவற்றை மறுபடியும் எவ்வாறு பெறுவது என்பதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

How to Recover TNPSC User ID

https://www.tnpsc.gov.in என்கின்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு முதலில் செல்லுங்கள் அந்த இணையதள பக்கத்தில் Forgot User ID என்ற தேர்வு இருக்கும் அதனை தேர்ந்தெடுங்கள் இது புதிய பக்கத்திற்கு செல்லும்.

Select Identification என்பதற்கு கீழ் Community Certificate Number, S.S.L.C Register Number, S.S.L.C Certificate Number என்கின்ற மூன்று தேர்வுகள் இருக்கும் அதில் ஏதாவது ஒன்றை நீங்கள் கொடுக்க வேண்டும்.

அதன்பிறகு பிறந்த தேதியை சரியாக உள்ளிட வேண்டும், குறிப்பாக ஏற்கனவே நீங்கள் கணக்கு தொடங்கப்பட்டபோது உள்ளிடப்பட்ட பிறந்த தேதியை உள்ளிட வேண்டும், உங்கள் பள்ளி கல்லூரி சான்றிதழில் இருக்கக்கூடிய சரியான பிறந்த தேதியை கொடுத்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளும்.

அதன் பிறகு சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும் இப்பொழுது புதிய பக்கம் திறக்கும் அதில் உங்களுடைய New User ID என்பதை நீங்கள் சரியாக பதிவு செய்ய வேண்டும் அதன் பிறகு கேப்சாவை கொடுத்து ok கொடுத்தால் New User ID நீங்கள் உருவாக்கி விட்டீர்கள்.

How to Reset TNPSC Password

https://www.tnpsc.gov.in என்கின்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு முதலில் செல்லுங்கள் அந்த இணையதள பக்கத்தில் Forgot Password என்ற தேர்வு இருக்கும் அதனை தேர்ந்தெடுங்கள் இது புதிய பக்கத்திற்கு செல்லும்.

புதிதாக திறந்து உள்ள பக்கத்தில் நீங்கள் ஏற்கனவே உருவாக்கிய உங்களுடைய New User ID கொடுக்க வேண்டும் அதன் பிறகு பிறந்த தேதி, வருடம், மாதம், ஆகியவற்றை சரியாக உள்ளிட வேண்டும் அதன் பிறகு அதன் கீழ் இருக்கக்கூடிய தொலைபேசி எண் அல்லது இமெயில் ஐடியை கொடுக்க வேண்டும்.

TNPSC Group 4 தேர்வு பாடப்பகுதியில் இயற்பியலின் இந்த பகுதி மிக முக்கியமானது..!

இப்பொழுது சமர்ப்பி என்பதை தேர்வு செய்யுங்கள் அதன்பிறகு நீங்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண் அல்லது இமெயில் ஐடிக்கு Link அனுப்பப்படும் அந்த Link மூலம் உங்களுடைய புதிய Password உருவாக்கிக் கொள்ளலாம்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment