டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க தொடங்கப்பட்டுள்ளது..!Online application for TNPSC Group 2 exam has started

Online application for TNPSC Group 2 exam has started

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க தொடங்கப்பட்டுள்ளது..!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் இருந்து இன்று முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது குருப்பு 2 மற்றும் 2A தேர்வுக்கான விண்ணப்பங்கள் 20.06.2024 முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் ஜூலை 19ஆம் தேதி விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குரூப் 2 தேர்வு மூலம் 2300 காலிபணியிடங்கள் நிரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது,தேர்வு வருகின்ற செப்டம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வ இணையதளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் பிரிலிம்ஸ் மற்றும் மெயின் தேர்வுகளுக்கும் 150 ரூபாய், 100 ரூபாய் மற்றும் 150 ரூபாய் செலுத்த வேண்டும் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட் பேங்கி,ங் அல்லது யுபிஐ மூலம் கட்டணத் தொகையை காலக்கெடுவிற்குள் செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் 2 மற்றும் 2Aக்கான தேர்வு பிரிலிம்ஸ் மற்றும் மெயின் தேர்வு என இரண்டு தேர்வுகள் நடைபெறுகிறது இந்தத் தேர்வுக்கு விண்ணப்பதாரர்களுக்கு 18 வயது முதல் 26 வயதிற்குள் இருக்க வேண்டும் குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது அதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

இணைய வழி விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாட்களுக்கு பின்னர் விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை திருத்துவதற்கு 24.07.2024 முதல் 27.07.2024 வரை மூன்று நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது இந்த இடைப்பட்ட நாட்களில் விண்ணப்பத்தில் உள்ள பிழைகளை விண்ணப்பதாரர்கள் திருத்த இயலும்.

அதன் பிறகு காலஅவகாசம் முடிந்த பிறகு விண்ணப்பத்தில் எந்த ஒரு பிழைகளையும் மாற்றத்தையும் செய்ய அனுமதிக்கப்பட மாட்டாது என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தேர்வலர்கள் மத்திய மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஏதாவது ஒரு பட்டய படிப்பு கட்டாயம் முடித்திருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரண்டு மொழிகளில் நடைபெறுகிறது இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் ஒரு மாதம் வழங்கப்பட்டுள்ளது விருப்பமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து.

அதில் வழங்கப்பட்டுள்ள முழு விவரங்களையும் நன்றாக படித்து பார்த்து தங்களுக்கு பிடித்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்கலாம் 2300 பணியிடங்கள் இருக்கிறது அதில் பல்வேறு பிரிவுகள் இருக்கிறது அவர்களுடைய கல்வித் தகுதிக்கேற்ற விண்ணப்பிக்கலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC Group 4 answer key released 2024..!

தேர்வு நடைபெறும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் போன்றவற்றைகளைப் பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளது, எப்படி விண்ணப்பிக்க வேண்டும், புகைப்படம் என்ன அளவில் இருக்க வேண்டும், போன்ற அனைத்து விவரங்களையும் தேர்வாளர்கள் நன்கு படித்து தெளிவாக விண்ணப்பிக்க வேண்டும்.

Online application notification Tamil

Online application notification English

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment