TN Govt Scheme to Invest 50000 Rupees for Girl Children
உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா தமிழக அரசு 50,000/- ரூபாய் குழந்தைகளுக்கு வழங்குகிறது உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள்..!
பெண் குழந்தைகளை பாதுகாப்பதற்கு தமிழக அரசு பல்வேறு சட்ட திட்டங்களை கொண்டு வருகிறது,பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம், வேலைவாய்ப்பு, தொழில் வளர்ச்சி, போன்றவற்றை கருத்தில் கொண்டு.
அவ்வப்போது புதிய திட்டங்களையும் வெளியிடுகிறது தற்போது பெண் குழந்தைகளின் பாதுகாப்பதற்காக தமிழக அரசு 50,000/-ரூபாய் அவர்களின் வங்கி கணக்கில் முதலீடு செய்கிறது இந்த திட்டத்தில் பெண் குழந்தைகள் உள்ள தாய்மார்கள் இணைந்து கொள்ளலாம்.
சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 2024 மற்றும் 2025 ஆம் ஆண்டிற்கான தகுதி உடைய பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் வீட்டில் இருப்பின் இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்த பிறகு தாய் மற்றும் தந்தையரில் யாராவது ஒரு நபர் குடும்ப கட்டுப்பாடு செய்திருக்க வேண்டும்.
இரண்டாவது பெண் குழந்தை பிறந்த பிறகு 3 ஆண்டுக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது, முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உங்களுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுக்குள் நீங்கள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.
அப்படி விண்ணப்பம் செய்தால் தகுதியான பெண் குழந்தைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுடைய வங்கி கணக்கில் ரூபாய் 25,000/- ரூபாய் வரவு வைக்கப்படுகிறது
இந்த திட்டத்தை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்ளுங்கள்
தாயின் வயது இந்த திட்டத்தில் 20 வயது முதல் 40 வயதிற்குள் இருக்க வேண்டும் குழந்தை பெற்றெடுத்த தாய் 40 வயதிற்குள் கட்டாயம் குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருக்க வேண்டும்.
உங்களுடைய குடும்ப வருமானம் ரூபாய் 72,000/- ரூபாய்க்குள் இருக்கிறது என்று கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற வேண்டும்.
உங்கள் குடும்பத்தில் ஆண் வாரிசு இல்லை என்று அதற்கான வட்டாட்சியரிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
இரண்டு பெண் குழந்தைகள் பிறப்பு சான்றிதழ் ஒருவேளை இரண்டு பெண் குழந்தைகளின் பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை முடிந்த பிறகு அதில் ஏதாவது ஒரு குழந்தை உயிரிழந்து போனால் அவர்களின் இறப்புச் சான்றிதழ்களை கட்டாயம் இணைக்க வேண்டும்.
தாய் மற்றும் தந்தையரின் வயது சான்றிதழ்களை கட்டாயம் இணைக்க வேண்டும் அதற்கு பள்ளி மற்றும் கல்லூரி சான்றிதழ்கள் அரசு மருத்துவரிடம் பெற்ற இருப்பிட சான்றிதழ் மற்றும் சாதி சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும்.
மருத்துவரிடம் குடும்ப கட்டுப்பாடு மேற்கொண்டதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும், ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இந்த திட்டத்தின் கீழ் நீங்களும் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பம் செய்யலாம். .
முதல் பிரசவத்தில் ஓர் பெண் குழந்தை பிறந்து இரண்டாவது பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகள் பிறந்த குடும்பமாக இருந்தாலும் அறுவை சிகிச்சை மேற்கொண்டு இருந்தால் இந்த திட்டத்தில் மூன்று ஆண்டுக்குள் விண்ணப்பம் செய்து ரூபாய் 25,000/- பெற்றுக் கொள்ளலாம்.
முதல் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்து இரண்டாவது பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்து குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்த பிறகு திடீரென்று அதில் ஏதாவது ஒரு குழந்தை உயிரிழந்து போனால் உயிருடன் இருக்கும் குழந்தைக்கு 50,000/-ரூபாய் வைப்பு தொகையை வழங்குகிறது தமிழக அரசு.
ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஆதார் கார்டு ஆகியவை கட்டாயம் விண்ணப்பம் பதிவு செய்யும்போது இணைக்க வேண்டும், இதற்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்றால் உங்கள் பகுதியில் உள்ள இ-சேவை மையத்திற்கு சென்று நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்த பிறகு நகல் ஒன்றினை பெற்று உங்கள் சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரிடம் அதை ஒப்படைக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |