உங்களுடைய சொத்து பத்திரம் தொலைந்து விட்டதா என்ன செய்வது அதனை எப்படி பெறுவது..!What to do if your property deed is lost and how to get it

What to do if your property deed is lost and how to get it

உங்களுடைய சொத்து பத்திரம் தொலைந்து விட்டதா என்ன செய்வது அதனை எப்படி பெறுவது..!

உங்களுடைய சொத்து சம்பந்தமான முக்கிய ஆவணங்கள் பத்திரங்கள் எதிர்பாராத விதமாக தொலைந்து விட்டால் அவைகளை மறுபடியும் எப்படி பெறுவது, பட்டா எண், புல எண், சர்வே எண், போன்றவைகள் தெரியவில்லை என்றால் என்ன செய்வது.

சொத்து சம்பந்தமான ஆவணங்கள் பத்திரங்களை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் ஒருவேளை அவை திடீரென்று தொலைந்து போகக்கூடிய சூழல் ஏற்பட்டால் அல்லது இயற்கை பேரிடர்கள் மூலம் சொத்து சம்பந்தமான பத்திரங்களில் பாதிப்பு ஏற்பட்டால்,அவைகளின் நகல்களை எளிமையாக அரசு அலுவலகம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்

முதலில் என்ன செய்ய வேண்டும்

சொத்து பத்திரம் தொலைந்து போனால் அல்லது இயற்கை பேரிடர் மூலம் பாதிக்கப்பட்டால் உங்களுடைய பகுதியில் உள்ள காவல் அலுவலகத்திற்கு சென்று உங்கள் சொத்து தொலைந்து உங்களுடைய சொத்து பத்திரம் தொலைந்து போனது குறித்து புகார் கொடுக்க வேண்டும்.

முதலில் எஃப் ஐ ஆர் (FIR) பதிவு செய்ய வேண்டும் பத்திரங்கள் தொலைந்து விட்டதாக தெரிவித்து முதல் தகவல் அறிக்கையை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் அந்த FIR நகல்களை காவல்துறையிடம் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.

அரசு அலுவலகத்திற்கும் அல்லது உங்களுடைய சொத்தை உங்களுக்கே தெரியாமல் யாராவது பத்திரப்பதிவு செய்து பயன்படுத்தி வந்தால் அப்பொழுது நீதிமன்ற வழக்குகளில் இந்த FIR கண்டிப்பாக பயன்படும்.

இந்த புகார் கூறிய ரசீதை நீங்கள் காவல்துறையில் பெற்று வைத்துக்கொள்ள வேண்டும் அதேபோல என்ன மாதிரியான பத்திரம், எந்த இடத்தில், எப்பொழுது தொலைந்து விட்டது, என்பது பற்றி பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய வேண்டும்.

பத்திரிகைகளில் எப்படி விளம்பரம் செய்ய வேண்டும்

குறிப்பாக தமிழ் மற்றும் ஆங்கிலம் அல்லது பிராந்திய மொழி செய்தித்தாள்களின் சொத்தின் விவரங்களை பற்றி விளம்பரம் செய்ய வேண்டும் இந்த பத்திரங்கள் கிடைத்தால் என்னிடம் ஒப்படைக்க வேண்டும் அதற்குரிய சன்மானம் வழங்குகிறேன் எனவும் வெளியிட வேண்டும்.

அதேபோல் ஹவுசிங் சொசைட்டியால் ஒதுக்கப்பட்ட பங்கு சான்றிதழ் தொலைந்து போனால் அதை மறுபடியும் வெளியிடுவதற்கு விண்ணப்பிக்க வேண்டும் இப்பொழுது FIR நகல் மற்றும் செய்தித்தாள் விளம்பரம் போன்றவற்றை விண்ணப்பத்துடன் நீங்கள் கட்டாயம் இணைக்க வேண்டும்.

காவல்துறையில் உரிய ஆவணங்கள் பெற வேண்டும் குறிப்பிட்ட நாட்கள் கழித்து பிறகும் உங்களது தொலைந்து பத்திரம் கிடைக்கவில்லை எனில் காவல்துறையிலிருந்து பத்திரம் கிடைக்கவில்லை (Not Traceable) என்ற கடிதத்தை நீங்கள் கட்டாயம் பெற வேண்டும்.

பிறகு தொலைந்த பத்திரம் பற்றி ஆட்சேபம் ஏதுமில்லை என்று நோட்டரி பப்ளிக் ஒரு நபரிடம் இருந்து உறுதிமொழி பெற்றுக்கொள்ள வேண்டும் மேற்கண்ட தகவல்களோடு பத்திரிகையில் வந்த விளம்பரத்தின் நகல்,சர்வே எண், விவரங்கள் உள்ளிட்டவை  ஆகியவற்றை சார் பதிவாளரை அணுகி விண்ணப்பம் செய்து கொள்ள வேண்டும்.

இதன் பிறகு ஓரிரு நாட்களுக்கு கழித்து தொலைந்த பத்திரத்தின் நகல்கள் உங்களுக்கு கிடைக்கும் தொலைந்த பத்திரங்கள் நகல் பெற்றுக் கொண்ட பிறகு தொலைந்த பத்திரம் கிடைக்கும் பட்சத்தில் சார் பதிவாளர்யிடம் அதை முறையாக தெரிவித்து.

இரண்டு பத்திரங்களிலும் சட்டப்படி எது செல்லுபடி ஆகும் என்பதை எழுத்துப் பூர்வமாக உறுதி செய்து கொள்வது மிக அவசியம் இதுபோன்ற புகார்கள் இணையதள மூலம் பதிவு செய்து எஃப் ஆர் பெரும் நடைமுறைகள் தற்போது வழக்கத்தில் உள்ளது.

காவல்துறையில் புகார் கொடுப்பதற்கு முன்பு உங்கள் பகுதியில் இது போன்ற வசதி இருக்கிறதா என்பதை நன்கு தெரிந்து கொள்ளுங்கள்.

புல எண் பட்டா எண் சர்வே எண் தெரியவில்லை

உங்களுடைய சொத்து பத்திரங்கள் தொலைந்து விட்டது அந்த சொத்துக்குரிய ஆவணங்களை பற்றி எதுவும் தெரியவில்லை எனில் உங்களுடைய கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்று உங்களுடைய சொத்திற்கு அருகில் இருக்கும் நபரின் சொத்துக்களை பற்றி முழுமையாக தெரிவியுங்கள்.

பத்திர பதிவுத்துறையில் தமிழ்நாடு அரசு பல்வேறு அதிரடியான மாற்றங்களை கொண்டு வருகிறது..!

உங்கள் கிராம நிர்வாக அலுவலகத்தில் உங்கள் பஞ்சாயத்தில் உள்ள அனைத்து நிலங்கள் பற்றிய தகவல்கள் இருக்கும் அதன் மூலம் உங்களுடைய நிலத்தின் சர்வே எண், பட்டா எண், போன்றவற்றை தெரிந்து கொள்ளலாம்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment