இந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு எவ்வளவு கட் ஆப் மார்க் எதிர்பார்க்கப்படுகிறது..!What is the expected cut off mark for TNPSC Group 4

What is the expected cut off mark for TNPSC Group 4

இந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு எவ்வளவு கட் ஆப் மார்க் எதிர்பார்க்கப்படுகிறது..!

அரசு பணியிடத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒவ்வொரு ஆண்டும் பதவிகளுக்கு ஏற்ப தேர்வுகளை நடத்துகிறது.

Group-1,to Group-8என இத்தனை தேர்வுகளை நடத்துகிறது இதில் குரூப்-4 தேர்வுக்கு எப்பொழுதும் அதிகப்படியான காலி பணியிடங்கள் அறிவிக்கப்படுகிறது இந்த பணியிடத்திற்கு 10ம் வகுப்பு முடித்து இருந்தால் போதும்.

தற்போது இந்த ஆண்டு ஜூன் 9ஆம் தேதி தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் பெற்றால் வேலை கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது என்பதை இந்த கட்டுரையில் அறிந்து கொள்ளலாம்.

இது உண்மையான கட் ஆப் மதிப்பெண் கிடையாது கடந்த காலங்களில் வேலை வாய்ப்பிற்கு அறிவிக்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண் இது தோராயமான மதிப்பெண் இதனை நீங்கள் உண்மை என்று நம்பிக்கை கொள்ளக் கூடாது.

உண்மையான கட் ஆப் மதிப்பெண் பற்றி தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மிக விரைவில் அதனுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடும்.

இந்த குரூப் ஃபோர் தேர்வில் தேர்ச்சி பெற்றால் போதும் நேர்முகத் தேர்வு கிடையாது உங்களுடைய கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் அரசு வேலை உறுதி உங்களுடைய பள்ளி கல்லூரி ஆனாங்கள் சரிபார்ப்பு நடைபெறும்.

இந்த ஆண்டு 6244 பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற்று உள்ளது இதை 20 லட்சத்திற்கு மேற்பட்ட இளைஞர்கள் எழுதியுள்ளார்கள் மேலும் பணியிடங்கள் 10,000 வரை அதிகரிக்க கூடும் என்று அரசு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது, தேர்வு முடிவுகள் வருகின்ற 2025 ஜனவரி மாதம் வெளியிடப்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது.

தோராயமாக எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் தேவை

பொதுப் பிரிவில் இருக்கும் ஆண் தேர்வாளர்களுக்கு 146-151 கட் ஆப் மதிப்பெண் இருக்கும் என எதிர்பார்க்கலாம்

பொது பிரிவில் இருக்கும் பெண் தேர்வாளர்களுக்கு 152-155 கட் ஆப் மதிப்பெண் இருக்கும் என எதிர்பார்க்கலாம்

பிற்படுத்தப்பட்ட பிரிவில் (ஓபிசி) ஆண்களுக்கு 146-151 கட் ஆப் மதிப்பெண் கேட்கப்படலாம்

பெண்களுக்கு 143-147 கட் ஆப் மதிப்பெண் கேட்கப்படலாம்

பிற்படுத்தப்பட்ட பிரிவு முஸ்லிம் (பிசிஎம்) ஆண்களுக்கு 142-145 கட் ஆப் மதிப்பெண் கேட்கப்படலாம்.

பெண்களுக்கு 139-146 கட் ஆப் மதிப்பெண் கேட்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது

(MBC) பிரிவில் ஆண்களுக்கு 143-146

எம்பிசி பிரிவில் பெண்களுக்கு 144-147

பட்டியல் இனத்தவர் பிரிவில் ஆண்களுக்கு 137-141

பட்டியல் இனத்தவர் பிரிவில் பெண்களுக்கு 139-142

அருந்ததியினர் பிரிவில் ஆண்களுக்கு 133-137

அருந்ததியினர் பிரிவில் பெண்களுக்கு 135-138

பழங்குடியினர் பிரிவில் ஆண்களுக்கு 132-135

பழங்குடியினர் பிரிவில் பெண்களுக்கு 133-136 இந்த கட் ஆப் மதிப்பெண் கேட்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கட் ஆப் மதிப்பெண் எப்படி நிர்ணயிக்கப்படுகிறது

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 4 கட் ஆப் மதிப்பெண்கள் பல்வேறு காரணங்களை அடிப்படையாக வைத்து வல்லுனர்களால் கணிக்கப்படுகிறது,இதில் எத்தனை நபர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்துள்ளார்கள் என்பதையும் கருத்தில் கொள்ளப்படுகிறது.

உங்களுடைய குழந்தைகளுக்கு 18 வயதிற்கு முன்பே PAN card பெற முடியுமா அதற்கு என்ன செய்ய வேண்டும்..!

எவ்வளவு மார்க் முடிவு செய்ய வேண்டும், என்பதை அடிப்படையாக சிலதை நிர்ணயிக்கிறார்கள் எத்தனை நபர்கள் விண்ணப்பம் செய்துள்ளார்கள், எத்தனை நபர்கள் தேர்வு எழுதி உள்ளார்கள், எத்தனை காலிப்பணியிடங்கள் தற்போது உள்ளது.

மேலும் எவ்வளவு காலிப்பணியிடங்களை அதிகரிக்க முடியும், இப்படி சில அடிப்படை காரணங்கள் இருக்கிறது அதிக நபர்கள் விண்ணப்பித்தால் மதிப்பெண் அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment