Order to provide free textbooks on school opening day
தமிழகத்தில் ஜூன் 10ஆம் தேதி பள்ளி திறக்கப்படுகிறது அன்று இலவசமாக 10 பொருட்கள் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது..!
தமிழகத்தில் வருகின்ற 10ம் தேதி கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படுகிறது அன்று அரசு மற்றும் அரசின் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பாட புத்தகங்கள் உட்பட 10 பொருட்கள் வழங்க அரசு தற்போது தயாராகி வருகிறது.
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் 20ஆம் தேதிக்கு பிறகு ஜூன் 1ம் தேதி வரை கோடை விடுமுறை ஒவ்வொரு ஆண்டும் விடுவது வழக்கம் ஆனால் காலநிலை மாற்றம் காரணமாக தற்போது வெயிலின் தாக்கம் பிப்ரவரி மாதமே அதிகரிக்க தொடங்குகிறது.
இந்த ஆண்டும் வழக்கம் போல் ஏப்ரல் 20ஆம் தேதிக்கு பிறகு பெரும்பான்மையான பள்ளிகளில் தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்டது மே மாதம் தமிழகம் முழுவதும் சராசரியான மழைப்பொழிவு இருந்தது மே மாதம் 28ஆம் தேதிக்கு பிறகு கடுமையான வெயில் மீண்டும் தொடங்கியது இதனை கருத்தில் கொண்டு,தமிழக அரசு வருகின்ற 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்ற ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பள்ளிகள் திறப்பதற்கு ஏன் கால தாமதம்
தற்போது நம் நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது அதற்கான வாக்கு எண்ணிக்கை கடந்த 4ம் தேதி தொடங்கியது இதில் அரசு ஊழியர்கள் பெரும்பாலும் ஈடுபடுவார்கள் அதில் ஆசிரியர்கள் இருப்பார்கள் மேலும் அதிகப்படியான வேலைபளு.
பள்ளிகள் 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது மாணவர்கள் சேர்க்கை மாணவர்களுக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குதல் போன்ற பல்வேறு பணிகள் இருப்பதால் அரசு ஆசிரியர்களுக்கு அதிக வேலை பளு இருப்பதால் மற்றும் கடுமையான வெயில் காரணமாக.
பள்ளிகளின் திறக்கப்படுவது 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுவிட்டது பள்ளி திறக்கும் அன்று வழங்கப்படும் பொருட்கள் என்ன பள்ளி திறக்கும் அன்று மாணவ மாணவிகளுக்கு பாட புத்தகம், நோட்டு புத்தகம்,புத்தகப்பை, காலணிகள், காலேந்திகள் மற்றும் கம்பளிச்சட்டை, மழைகோட், பூட்ஸ், சீருடைகள், காலுறைகள், வண்ணபென்சில்கள், வண்ணக் கரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகர பெட்டிகள் மற்றும் புவியியல் வரைபடங்கள் ஆகிய நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளது.
மாணவ மாணவிகள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம்
பள்ளி திறக்கப்படும் அன்று மாணவ மாணவிகளுக்கு இலவசமாக பேருந்து சீட்டு வழங்க முடியாது அதனால் கடந்த 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான வழங்கப்பட்ட பயண அட்டையை மாணவர்கள் தங்களுடைய வழித்தட பேருந்துகளில் காண்பித்து பயணம் செய்யலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |