கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் 31 வயது இளைஞர்கள் பலி திராவிட மாடல் கல்வெட்டில் எழுதுங்கள் இதுபோன்ற சம்பவத்தையும்..!31 year old youth died due to lack of doctors at Guindy Govt Hospital

31 year old youth died due to lack of doctors at Guindy Govt Hospital

கிண்டி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் 31 வயது இளைஞர்கள் பலி திராவிட மாடல் கல்வெட்டில் எழுதுங்கள் இதுபோன்ற சம்பவத்தையும்..!

திமுக எப்பொழுது எல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்போதெல்லாம் தமிழகத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது கடந்த 2006 முதல் 2011 வரை கேடுகெட்ட அரசை கொடுத்த கருணாநிதி அவர்களால் பல்வேறு இன்னல்கள் தமிழ்நாட்டில் ஏற்பட்டது.

குறிப்பாக மின்வெட்டு என்பது கிராமப்புறங்களில் 18 மணி நேரம் இருந்தது மின்வெட்டு பிரச்சனையால் மருத்துவமனையில் பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு ஏற்பட்டது தொடர்ந்து அராஜகம் அட்டூழியம் ஊழல் என பொதுமக்களுக்கு அனைத்து இன்னல்களையும் கொடுத்தார் கருணாநிதி.

இதனால் 10 ஆண்டுகள் தமிழக மக்கள் திமுகவை புறக்கணித்தார்கள் மறுபடியும் கெஞ்சியும் மக்களிடம் மன்னிப்பு கேட்டு 7 கட்சிகள் பல்வேறு அமைப்புகளை இணைத்து வெற்றி பெற்ற திராவிட முன்னேற்றக் கழகம் மீண்டும் கருணாநிதி போன்றே மறைமுகமான ஒரு ஆட்சியை கொடுத்து வருகிறது.

2021 முதல் 2024 இதுவரை 40 மாதங்களில் தமிழக அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் புதிதாக பணிக்கு அமர்த்த வில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகிறது 7 மருத்துவர்கள் இருக்கும் இடத்தில் 1 மருத்துவர் தான் இருக்கிறார் அதுவும் சில நேரங்களில் இருக்கவில்லை என்று குற்றம் சாட்டப்படுகிறது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் மருத்துவர்களுக்கான வேலை பளு மன அழுத்தம் அதிகமாகின்றது,நோயாளிகளின் எண்ணிக்கையும் ஒவ்வொரு நாளும் அதிகமாக மருத்துவமனையில் கூடுகிறது இதனால் நோயாளிகளுக்கும் மருத்துவர்கள் இடையே மோதல்கள் அதிகரிக்கிறது.

கிண்டி அரசு மருத்துவமனையில் தன்னுடைய தாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு சிகிச்சை வழங்க வேண்டும் என மருத்துவமனையில் இளைஞர் பாலாஜி என்ற மருத்துவரை கத்தியால் குத்தினார்.

விசாரணையில் அவர் உரிய நேரத்தில் சிகிச்சை வழங்கவில்லை மரியாதையாக நடத்தவில்லை எனக் குற்றம் சாட்டினார் மருத்துவரை தாக்கியதால் மருத்துவர்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டார்கள் இந்த நேரத்தில் விக்னேஷ் என்ற பெருங்களத்துரை சேர்ந்த இளைஞர் வயிற்று வலியால்.

கிண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவருக்கு திடீரென்று உடல்நலம் மோசம் அடைந்துள்ள நிலையில் தீவிர பிரிவு சிகிச்சையில் அனுமதித்துள்ளார்கள் ஆனால் அங்கும் மருத்துவர் இல்லாததால் அவர் உயிரிழந்து உள்ளார்.

அதன்பின்னர் அவருடைய உறவினர்கள் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள் ஊழல் என்பது திமுகவிற்கு முதன்மையாக இருக்கிறது மக்கள் தினந்தோறும் செத்து மடிகிறார்கள் 234 தொகுதிகளிலும் தன்னுடைய தந்தைக்கு சிலை வைக்க வேண்டும் புதிய திட்டங்களுக்கு தந்தை பெயர் வைக்க வேண்டும்.

புதிய சாலைகளுக்கு தந்தை பெயர் வைக்க வேண்டும் என தினந்தோறும் கடுமையாக உழைக்கும் திரு ஸ்டாலின் அவர்கள் மக்கள் செத்து மடிவதை கண்டு சிரிக்கிறார் என்று நாம் நினைத்துக் கொள்ளலாம்.

சென்னையில் என்ன காரணத்திற்காக மருத்துவரை கத்தியால் இளைஞர் குத்தினார்..!

இதையெல்லாம் அவர் கேட்க மாட்டார் இது போன்ற கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பள்ளி மாணவி காலில் அடிபட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருடைய கால் எடுக்கப்பட்டு பின்பு அந்த பள்ளி மாணவி உயிரிழந்தார்.

மருத்துவ துறை என்பது சீர்கெட்டு இருக்கிறது, சட்டம் ஒழுங்கு போதை, போன்று பள்ளி கல்லூரிகளில் சாதி சம்பந்தமான பிரச்சனை ஊழல்,கொண்டிருக்கிறது என்று சொல்லலாம்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment