TN the electricity tariff will increase from July 1
தமிழகத்தில் அடுத்த மாதம் முதல் மின் கட்டணம் உயர்கிறது எவ்வளவு சதவீதம் அதிகரிக்கும்..!
தமிழகத்தில் ஜூலை மாதம் 1ம் தேதி முதல் மின் கட்டணம் 6 சதவீதம் வரை அதிகரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் சுமார் 1.60 லட்சம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவித்து வருகிறது மேலும் கடுமையான நிதி நெருக்கடியிலும் சிக்கி உள்ளது இதனை மீட்டு எடுப்பதற்கும் மின் துறையை சரி செய்வதற்கும்.
கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி மின் கட்டணம் 30 சதவீதத்திற்கு மேல் ஒரே நேரத்தில் அதிகரிக்கப்பட்டது மேலும் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அதாவது ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி முதல் குறிப்பிட்ட சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்படும்.
அதாவது 6 சதவீதம் அல்லது ஏப்ரல் மாதத்தின் பண விகிதம் இவற்றில் எது குறைவாக உள்ளதோ அதன் அடிப்படையில் 2027 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு ஜூலை மாதம் 1ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்வு தானாகவே நடைமுறையில் வரும்.
என்று முன்னாள் மின்துறை அமைச்சர் திரு செந்தில் பாலாஜி அவர்கள் ஒரு சீர்திருத்தத்தை கொண்டு வந்தார் தற்போது அதுபோலவே மின்கட்டணம் அடுத்த மாதம் 1ம் தேதி முதல் உயர்கிறது.
கடந்த 2023 ஜூலை மாதம் 1ம் தேதி 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது அதில் வீடுகளுக்கான கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றுக்கொண்டது வணிக வளாக மற்றும் தொழிற்சாலைகளுக்கு மட்டுமே ஒரு யூனிட்டிற்கு 13 காசு முதல் 21 காசு வரை மின் கட்டணம் உயர்த்தப்பட்டது.
டிஎன்பிஎஸ்சி தேர்வு என்றால் என்ன அதில் எத்தனை வகைகள் உள்ளது..!
கடந்த 2022 ஆம் ஆண்டு மின் ஒழுங்குமுறை ஆணையம் பிறப்பித்த உத்தரவுப்படி நடப்பாண்டுக்கான மின் கட்டண உயர்வு அடுத்த மாதம் அமலில் வருகிறது 6 சதவீதம் வரை கட்டண உயர்வு இருக்கலாம்.
ஆனால் அரசு என்ன முடிவு எடுக்கும் என்பது அடுத்த மாதம் தெரியும் இதனால் பெரும்பாலும் பாதிக்கப்படுவது தொழிற்சாலைகள், சிறிய கடை வைத்து நடத்தும் நடுத்தர குடும்பங்கள், போன்றவர்கள் நிச்சயம் பாதிக்கப்படுவார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE TELEGRAM CLICK HERE