Thol Thirumavalavan is in a state of mind leaving the DMK alliance
கூட்டணியை விட்டு வெளியில் வாருங்கள் இல்லையென்றால் நமக்கென ஒரு அடையாளத்தை நாம் இழந்து விடுவோம் நிச்சயம் கூட்டணியை விட்டு வெளியில் வந்தால் மட்டுமே 2026க்கு பிறகு கட்சி வளர்ச்சிப் பணியில் செல்லும்.
இல்லையென்றால் நிச்சயம் மிகப்பெரிய சரிவை கட்சி சந்தித்து விடும் என திருமாவளவன் உணர்ந்துவிட்டார் திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவனுக்கு திமுகவின் ஐடி வின் பிரிவால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.
குறிப்பாக தலித் மக்களுக்கு எதிரான தாக்குதல்கள் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சிக்காலத்தில் அதிகம் கடந்த 2006 முதல் 2011 வரை ஆட்சி செய்த கருணாநிதி ஆட்சிக்காலத்தில் மின்வெட்டு பிரச்சனை, நில அபகரிப்பு பிரச்சனை, திமுகவின் மாவட்ட செயலாளர் அவர்கள் குறுநில மன்னர்கள் போல் செயல்பட்டார்கள்.
இதனால் கடும் கோபம் அடைந்த தமிழக மக்கள் 10 ஆண்டுகள் திமுகவை புறக்கணித்தார்கள் 2016 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதி விஜயகாந்துடன் கூட்டணி அமைக்க பல நாட்கள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி தோல்வியை சந்தித்தார்.
கருணாநிதி கொடுத்த கேடுகெட்ட ஆட்சியால் நிச்சயம் அவரிடம் கூட்டணி வைத்தால் தமிழக மக்கள் நம்மளை புறக்கணித்து விடுவார்கள் என சில கட்சிகள் கருணாநிதி உடன் கூட்டணி வேண்டாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள்.
முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் 2016 ஆம் ஆண்டு 5 வருட ஆட்சிக்குப் பிறகு 234 தொகுதிகளிலும் தனித்து களம் இறங்கி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை இரண்டாவது முறையாக கைப்பற்றினார்.
இந்த அவமானம் கருணாநிதியால் தாங்க முடியவில்லை ஏனென்றால் கருணாநிதி அரசியலுக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்து விட்டது ஆனால் செல்வி ஜெயலலிதா அவர்கள் 1985 களில் தான் அரசியலில் நுழைந்தார்,திமுக என்பது பழமையான கட்சி திமுகவில் இருந்து பிரிந்தது தான் அதிமுக.
2016 ஆம் ஆண்டு அதிமுக வெற்றி விழாவில் பேசிய முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா
நான் ஒரு பெண் நான் அனாதை நான் உங்களை நம்பி இருக்கிறேன் தேர்தலில் நீங்கள் தான் கடவுள் உங்களை நம்பி நான் களத்தில் இறங்கினேன் என்னை வெற்றி பெற செய்தீர்கள் அதற்கு சரியான காரணம் ஐந்தாண்டுகள் நான் உங்களின் மனங்களை வென்று உள்ளேன்.
உங்கள் தேவைகளை பூர்த்தி செய்துள்ளேன்,இதன் காரணமாகத்தான் தனித்து நின்றாலும் என்னை வெற்றி பெற செய்தீர்கள் நான் ஒரு பெண் என்னை எதிர்த்து கருணாநிதி 10 கட்சிகளுடன் கூட்டணி அமைத்து சதி திட்டம் தீட்டினார் ஆனால் கடவுள் போல் என்னை நீங்கள் காப்பாற்றி விட்டீர்கள்.
உங்களுக்காக என்னுடைய வாழ்க்கையை அர்ப்பணிக்கிறேன் என ஒரு மனதை தொடும் வார்த்தையை பேசினார் தமிழக மக்கள் உண்மையாகவே முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்களுக்கு அவ்வளவாக மதிப்பும் மரியாதையும் கொடுத்தார்கள்.
அதிமுக கட்சி மற்றும் அதன் தலைவர்களுக்கு தமிழக மக்களிடத்தில் எப்பொழுதும் நன்மதிப்புகள் இருக்கும் எம் ஜி ஆர் கட்சி தொடங்கியதுமே மூன்று முறை தொடர்ந்து வெற்றி பெற்றார் அவருடைய ஆட்சி மூன்று முறையும் கலைக்கப்பட்டது.
ஆனால் மூன்று முறையும் அவர் வெற்றி பெற்றார் அதிமுக தொடர்ந்து 10 ஆண்டுகள் ஆட்சி செய்து உள்ளது இரண்டு முறை ஆனால் திமுக ஒருமுறை ஆட்சி செய்தால் அடுத்த தேர்தலில் நிச்சயம் தோல்வி என்பது கடந்த 75 ஆண்டுகளாக தெரிகிறது.
கட்சி தொடங்கி 75 ஆண்டுகள் ஆகிறது ஆனால் வெறும் 22 ஆண்டுகள் தான் ஆட்சி செய்துள்ளார்கள் அதிமுக கட்சி தொடங்கி 53 ஆண்டுகள் ஆனால் 30 வருடங்கள் ஆட்சி செய்து விட்டார்கள் அதிமுக கட்சியின் தலைமைக்கு வாரிசு அரசியல் இல்லை.
இதனால் அந்த கட்சியில் யார் வேண்டுமானாலும் தலைவர் பதவிக்கு போட்டியிடக் கூடிய சூழ்நிலை இருக்கிறது திமுக என்பது வாரிசு கட்சியாக மாறிவிட்டது கருணாநிதி அவருடைய மகன் மு க ஸ்டாலின், அவருடைய மகன் உதயநிதி, அடுத்தது அவருடைய மகன் இன்பநதி,இப்படி தொடர்ந்து நிதி கணக்காக வாரிசு அரசியலில் களம் இறங்குகிறார்கள்.
2026 ஆம் ஆண்டு அதிமுகவின் வெற்றி பிரகாசமாக உள்ளது
2026 ஆம் ஆண்டு நிச்சயம் அதிமுக வெற்றி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது ஏனென்றால் பாமகவின் வாக்கு வங்கி என்பது முற்றிலும் சிதைந்து விட்டது பாமக 2026 ஆம் ஆண்டு பாஜகவுடன் கூட்டணி வைத்தால் கட்சிக்கான போய்விடும் என்ற சூழ்நிலை உணர்ந்து விட்டது.
2026 ஆம் ஆண்டு மக்கள் தங்களுடைய பார்வையை ஆட்சி மாற்றம் பக்கம் திருப்பி விடுவார்கள் ஏனென்றால் திராவிட மாடல் ஆட்சிக்காலத்தில் இங்கு தவிர்க்க முடியாத பிரச்சினையாக இருப்பது போதை பொருள் தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் போதைப்பொருள் நடமாட்டம் என்பது தமிழகத்தில் உச்ச கட்டத்தில் இருக்கிறது.
எங்கு பார்த்தாலும் கஞ்சா எளிமையாக கிடைக்கிறது மேலும் பாலியல் புகாரங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது சட்டம் ஒழுங்கு பிரச்சனை உச்சகட்டத்தில் இருக்கிறது முக்கியமாக இந்த மூன்றரை வருடங்களாக கிராமப்புறங்களில் அடிப்படை வசதிகளை திமுகவால் சரியாக செய்ய முடியவில்லை.
திமுக கட்சியில் மேயர்கள் அடிக்கடி மாற்றப்படுகிறார்கள் கவுன்சிலர்கள் பல்வேறு சண்டை சச்சரவுகள் இருக்கிறது மூனரை லட்சம் கோடி கடன் வாங்கி குவித்துள்ளது பல்வேறு சர்ச்சைகள் ஆட்சியில் நீடித்து வருகிறது இதனால் நிச்சயம் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையை தற்போதைய கிளப்பிவிட்டது.
2016 முதல் 2021 வரை ஆட்சி செய்த எடப்பாடி கே. பழனிசாமி ஆட்சி காலம் நன்றாக இருந்தது என பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் 2006 முதல் 2011 வரை ஆட்சி செய்த திமுக அடுத்த தேர்தலில் வெறும் 26 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்தது, ஆனால் அதிமுக 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தும் 75 தொகுதிகளில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாக வலுவாக இருக்கிறது.
திமுகவை விட்டு வெளியில் வாருங்கள்
வீசிக கட்சிக்குள் இந்த குரல் சமீப காலமாக இருக்கிறது தற்போது திமுகவுடன் கூட்டணியில் இருப்பதால் நம்மளால் எதுவும் செய்ய முடியவில்லை பாதிக்கப்படுவது நாம் மட்டுமே 4 வருடங்களுக்கு முன்பு அரசியலில் நுழைந்தவர் முதலமைச்சர்.
உங்களுடைய அரசியல் அனுபவம் என்ன அவருடைய அரசியல் அனுபவம் என்ன நீங்கள் சிறியவரிடம் சென்று தொகுதி கேட்டு நிற்க வேண்டுமா அவர்தான் உங்களிடம் வந்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் தயவு செய்து திமுகவுடன் கூட்டணி வேண்டாம் என்ற முடிவை.
வீசிக இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட, தலைவர்கள் தொடர்ந்து கொடுத்து வருகிறார்கள் திருமாவளவனம் தொடர்ந்து 10 ஆண்டுகள் திமுகவுடன் கூட்டணி இருந்தால் கட்சியின் முக்கிய தொண்டர்கள் உறுப்பினர்கள் திமுக என்ற நிலைமைக்கு வந்து விடுவார்கள் கூட்டணி மாற்றினால் தான் கட்சி வளரும்.
தற்போது வீசிக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, போன்ற மாநிலங்களில் போட்டியிட்டு மாநில அந்தஸ்து பெறுகின்ற கட்சியாக மாறிவிட்டது அதற்கு முதலில் தமிழ்நாட்டில் நாம் சக்தி வாய்ந்த நபராக இருக்க வேண்டும் நமக்கு ஆட்சி அதிகாரத்தின் பங்கு இருந்தால் மட்டுமே நாம் வெளிமாநிலங்களில் வெற்றி நடை போட முடியும்.
திமுக 2026 ஆம் ஆண்டு 200 தொகுதிகளில் நிச்சயம் களம் இறங்குவோம் என முடிவு செய்துவிட்டது திமுகவுடன் சென்றால் நமக்கு 6 தொகுதிகள் அல்லது 7 தொகுதிகள் கொடுப்பார்கள் அதிமுகவுடன் சென்றால் நிச்சயம் 20 தொகுதிகள் அமைச்சர் பதவி கிடைக்கும்.
விஜய் இப்பொழுது தான் அரசியலில் களம் இறங்கியுள்ளார் நிச்சயம் அவரால் வெற்றி பெற்ற முதலமைச்சர் பதவி பெற முடியாது எனவே நாம் அதிமுகவுடன் செல்வது மட்டுமே சரியானது என மறைமுகமாக திருமா காய்களை நகர்த்தி வருகிறார்.
35 தொகுதிகளை இழக்கும் திமுக
தற்போது ரகசியமாக ஒரு சர்வீஸ் செய்துள்ளது அதில் VCK கூட்டணியை விட்டு பிரிந்து சென்றால் நிச்சயம் 35 தொகுதிகளில் தோல்வி என்பதை திமுக உணர்ந்துவிட்டது கூட்டணியில் வைத்தால் 20 தொகுதிகளுக்கு மேல் கேட்பார்கள் மேலும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பார்கள்.
ராணுவத்தில் சேர வேண்டுமா கோவையில் 4ம் தேதி நேரடி முகாம் நடைபெறுகிறது..!
என்ன செய்வது என்று யோசித்து வருகிறது நடிகர் விஜய் சமாளிக்க செந்தில் பாலாஜி இருக்கிறார் ஆனால் VCK சமாளிக்க யார் இருக்கிறார்கள் என திமுக தற்போது திணறி வருகிறது தொல் திருமாவளவன் ஒரு தலித்.
காங்கிரஸ் அதிக தொகுதிகல் கொடுத்து அதனை ஈடுகட்ட முடியுமா என திமுக தற்போது காய்களை நகர்த்தி வருகிறது எப்படி இருந்தாலும் 2026 ஆம் ஆண்டு திமுகவுடன் கூட்டணி வைக்கும் கட்சிகள் படுதோல்வி என்பதை தெளிவாக தெரிகிறது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |