Some information about Sukreeswarar Temple in Tirupur
திருப்பூரில் உள்ள சுக்ரீஸ்வரர் கோவில் பற்றிய சில தகவல்கள்..!
சுக்கிர பகவான் உச்சம் பெறுகின்ற ராசி, வீடு, லக்னம், போன்ற நபர்கள் வாழ்க்கையில் பொன், பொருள், செல்வம், கல்வி, காதல், போன்றவை கிடைப்பதற்கு நீங்கள் சுக்கிர பகவானை வணங்கி வரலாம்.
இதனால் பல்வேறு மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் நம்மளுடைய ஜோதிட சாஸ்திரத்தின் படி உங்களுடைய உடம்பு எந்த தத்துவத்தின் அடிப்படையில் இந்த பிரபஞ்சத்தில் செயல்படுகிறது அந்த தத்துவத்தின் அடிப்படையில் கோள்களில் இருந்து வெளியிடப்படும்.
கதிர்கள் உங்கள் உடலில் ஈர்க்கப்படும் இதனால் உங்கள் வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் முக்கியமாக உடலில் ஈர்ப்புசை என்பது சரியாக இருந்தால் மட்டுமே பணத்தை உங்களால் ஈர்க்க முடியும் ஈர்ப்பு விசை சரியாக இல்லாத சூழ்நிலையில்.
நீங்கள் அதனை உடலில் செயல்படுத்த வேண்டும் அதற்கு உங்களுடைய ராசி, லக்னம், நட்சத்திரம், போன்றவற்றை சரியாக கனித்து அதற்கு ஏற்ப பரிகாரம் செய்தால் நிச்சயம் உங்களுக்கு பணம் வரவு அதிகமாக இருக்கும்.
2500 வருட பழமையான சுக்ரீஸ்வரர் கோவில்
திருப்பூரில் இருந்து ஊத்துக்குளி செல்லும் சாலையில் 8 கிலோமீட்டர் தொலைவில் இந்த சுக்ரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது குறிப்பாக ராமாயண காலத்தில் ஸ்ரீராமருக்கு உதவியாக இருந்த சுக்ரீஸ்வர பகவான் இங்கு ஈஸ்வனை பிரதிஷ்டை செய்து வழிபட்டதால் மூலவருக்கு சுக்ரீஸ்வரர் என்று பெயர் அழைக்கப்பட்டதாக பண்டைய புராணங்கள் தெரிவிக்கிறது.
இந்தக் கோவிலில் காற்று, ஆகாயம், நிலம், நீர், நெருப்பு, ஆகிய பஞ்ச பூதங்களை குறிக்கும் வகையில் பஞ்சலிங்கம் இருக்கிறது மூலவர் அக்னி லிங்கமாக இருக்கிறார் சிவனுக்கு பிடித்த வில்வ மரத்தின் கீழ் ஆகாச லிங்கம் அமைந்துள்ளது.
இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டின் கீழ்
1952 ஆம் ஆண்டு கோவிலை புனரமைக்க செய்யும்போது அஸ்திவாரத்தை பலப்படுத்த நடவடிக்கை எடுத்தபோது ஒரு ஆச்சரியமான அதிசயத்தை கண்டுபிடித்தார்கள் பொறியாளர்கள் இந்த கோவிலை போலவே பூமிக்கு அடியில் இதே கட்டுமானத்தில் ஒரு கற்கோவில் இருக்கிறது என்பது தெரிய வந்தது.
பூமிக்கு அடியில் இருக்கும் கற்கோவிலின் மேல் தான் மற்றொரு கோவில் மற்றும் உள்ளது என்பதை பொறியாளர்கள் அப்போது கண்டுபிடித்தார்கள் இதன் காரணமாகத்தான் பல வருடங்கள் ஆனாலும் இந்த கோவில் இன்னும் நிலையானதாக இருக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கோவிலில் இரண்டு நந்திகள் இருக்கிறது
முன்னொரு காலத்தில் இந்த கோவிலுக்கு அருகில் உள்ள விவசாய நிலத்தில் நந்தி ஒன்று மேய்ந்து கொண்டு இருந்தது இதனை பார்த்த விவசாயி கோபம் அடைந்து கையில் வைத்து இருந்த கத்தி மூலம் அந்த நந்தியின் காது மற்றும் கொம்பினை அறுத்துவிட்டார்.
அதன்பிறகு மறுநாள் கோயிலுக்கு சென்று பார்த்தபோது கற்சிலை நந்தி காது மற்றும் கொம்பிலிருந்து ரத்தம் வழிந்து உள்ளது இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த விவசாயி நிலத்தில் மேய்ந்தது நந்தி என்பதை உணர்ந்து கொண்டார்.
இந்த ஆவணி மாதத்தில் 12 ராசிகளுக்கான ராசி பலன்கள் எந்த ராசிக்கு அதிகமான பண வரவுகள் இருக்கும்..!
உடனடியாக புதிய நந்தியினை செய்து வழிபட முயற்சி செய்தார் ஆனால் அவரால் முடியவில்லை அடுத்த நாள் கோவிலில் வந்து பார்த்தபோது பழைய நந்திக்கு பின்னால் புதிய நந்தி இருந்துள்ளது உடனடியாக கடவுளிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் அவருடைய கனவில் வந்த கடவுள் பழைய நந்தி இருந்த இடத்தில் இருக்கட்டும் என தெரிவித்துள்ளார்.
சுக்கிர பகவான் உச்சம் பெறும் ராசி, வீடு, லக்னம், உடைய ராசிக்காரர்கள் இந்த கோவில் சென்று வழிபட்டால் நிச்சயம் பணவரவு அதிகரிக்கும் என தெரிவிக்கிறார்கள் முக்கியமாக சுக்கிர பகவான் என்றால்.
கலைத்துறை, மற்றும் கலைத்துறையில் இருக்கும் நபர்கள் இந்த கோவிலில் வழிப்பட்டால் நிச்சயம் அவர்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும் என தெரிவிக்கிறார்கள்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |