விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் எடப்பாடி கே பழனிசாமி அறிவிப்பு கட்சியை பலப்படுத்த வேண்டும்..!EPS will take a tour across TN to strengthen the party

EPS will take a tour across TN to strengthen the party

விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் எடப்பாடி கே பழனிசாமி அறிவிப்பு கட்சியை பலப்படுத்த வேண்டும்..!

இன்று அதிமுகவின் செயற்குழு கூட்டம் சென்னையில் உள்ள எம்ஜிஆர் அலுவலகத்தில் நடைபெற்றது அப்பொழுது மத்திய அரசுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது மற்றும் மாநில அரசுக்கு எதிராகவும் தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது.

கட்சியை வலுப்படுத்துவதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது கட்சியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கும் இளைஞர்கள் சேர்ப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என விவாதிக்கப்பட்டது.

இதற்கிடையில் விரைவில் தமிழக முழுவதிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் முடிவு செய்துள்ளார் அதனைப் பற்றிய தகவல்கள் தற்போது கசிந்துள்ளது.

2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் அதிமுக

தேர்தலுக்கு இன்னும் 2025 ஆம் ஆண்டு மட்டுமே முழுமையாக இருப்பதால் இப்பொழுது எதிர்க்கட்சியாக இருக்க அதிமுக தீவிரமாக தேர்தலுக்கு தயாராக முடிவு செய்துள்ளது.

கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சரி செய்யவும் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்க்கவும் உட்கட்சி தேர்தலை நடத்தவும் உறுப்பினர்களுக்கு புதிய அடையாள அட்டை வழங்கவும் தயாராகியுள்ளது.

எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் விரைவில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார் அப்பொழுது பிரம்மாண்ட பொதுக் கூட்டங்களும் நடத்தப்படும் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் பிரம்மாண்ட பொதுக் கூட்டங்கள் நடத்தி.

கட்சியில் உறுப்பினர்கள் மற்றும் இளைஞர்களை அதிக அளவில் சேர்ப்பதற்கு முழுவீச்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட செயலாளர்களுக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது இப்படி செய்தால் நிச்சயம் கட்சி வலுப்பெற்றுவிடும்.

மேலும் சிறிய கட்சிகளையும் கூட்டணியில் இணைத்து தேர்தலை சந்தித்தால் நிச்சயம் 2026 ஆம் ஆண்டு அதிமுக வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என அந்த கட்சியில் இருந்து தகவல்கள் கசிந்துள்ளது.

திமுக கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தை, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் மற்றும் இதர கட்சிகள் தேர்தல் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் வெளியிடாமல் அமைதியாக இருக்கிறார்கள்.

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கில் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது..!

எதிரணியில் இருக்கும் அதிமுக, பாமக, நாம் தமிழர் கட்சி, விஜய், கிருஷ்ணசாமி, தேமுதிக, உள்ளிட்ட கட்சிகள் தற்போது 2026 ஆம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகி விட்டார்கள் முழு வீச்சியில் கட்சியை பலப்படுத்துவதற்கும் கட்சியில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கும்.

தமிழகம் முழுவதிலும் பிரம்மாண்ட பொதுக் கூட்டங்கள் நடத்துவதற்கும் தயாராகியுள்ளார்கள், திமுக கூட்டணியில் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு திமுக மட்டுமே இருக்கிறது கூட்டணி கட்சிகள் திமுக மீது கடுமையான அதிர்ச்சியில் உள்ளார்கள்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment