Botany Important Question Answers to crack TNPSC Exam Aug 16
TNPSC தேர்வில் வெற்றி பெற தாவரவியல் முக்கியமான வினா விடைகள்…!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வில் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல நீங்கள் வெற்றி பெற்றாலும் அதிகமான கட் ஆப் மதிப்பெண்கள் பெற்றால் மட்டுமே வேலைவாய்ப்பு பெற முடியும்.
வெற்றி பெறுவதற்கு 60 சதவீதம் மதிப்பெண்கள் போதும் ஆனால் வேலைவாய்ப்பு பெறுவதற்கு 85 சதவீத மதிப்பெண்களை கடந்தால் மட்டுமே உங்களால் வேலைவாய்ப்பை பெற முடியும் தற்போது ஒரு பணியிடத்திற்கு 340 நபர்கள் போட்டியிடுகிறார்கள் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு பல்வேறு தேர்வுகள் பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது தற்போது குரூப்-1, குரூப்-4 தேர்வுகள் நடந்து முடிந்து விட்டது செப்டம்பர்-14ஆம் தேதி குரூப்-2 தேர்வு நடைபெற உள்ளது மற்றும் தொழில்நுட்ப சேவைகளுக்கான தேர்வுகள் குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டுக்குள் 75,000 பணியிடங்களை நிரப்ப வேண்டும் என (TNPSC) அறிவித்துள்ளது, நான்கு மாதங்களுக்கு ஒரு முறை வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுக் கொண்டே இருக்கிறது நீங்கள் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டுமென்றால் அனைத்து பாடப்பகுதிகளிலும் நன்றாக மதிப்பெண்கள் பெற வேண்டும்.
இது தெரிந்தால் TNPSC தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்..!
குறிப்பாக கட் ஆப் மதிப்பெண்கள் குரூப் 4 தேர்வுக்கு 170 கடந்திருக்க வேண்டும் அப்பொழுது தான் உங்களால் வேலை வாய்ப்பினை பெற முடியும், இந்த கட்டுரையில் தாவரவியலில் தாவர செல் மற்றும் விலங்கு செல்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் குறித்து சில கேள்விகள் பதில்கள் வழங்கப்பட்டுள்ளது நிச்சயம் இது பயனுள்ளதாக இருக்கும்.
தாவர செல் விலங்கு செல்களுக்கு இடையே உள்ள வேறுபாடு
தாவர செல்
பொதுவாக விலங்கு செல்லோடு ஒப்பிடும் போது தாவரச் செல் பெரியது
பிளாஸ்மா சவ்வுடன் கூடுதலாக செல் சுகர் காணப்படுகிறது இது மையத்தட்டு முதன்மை சுவர் மற்றும் இரண்டாம் நிலை சுவரை கொண்டுள்ளது
பிளாஸ்மோடெஸ்மேட்டா காணப்படுகிறது
பசுங்கணிகம் காணப்படுகிறது
நிலையான பெரிய வாக்குவோல்கள் காணப்படுகிறது
வாக்குவேலை சுற்றி டோனோபிளாஸ்டு சவ்வு காணப்படுகிறது
பொதுவாக சென்ட்ரியோல்கள் காணப்படுவதில்லை ஆனால் நகரும் திறன் கொண்ட கீழ்நிலை தாவர செல்களில் மட்டும் காணப்படுகிறது
உட்கரு செல்லின் ஓரங்களில் காணப்படுகிறது
லைசோசோம்கள் அரிதாகக் காணப்படுகிறது
சேமிப்பு பொருளாகத் தரசம் உள்ளது
விலங்கு செல்
தாவர செல் உடன் ஒப்பிடும்போது விலங்கு செல் சிறியது
செல் சுவர் கிடையாது
பிளாஸ்மோடெஸ்மேட்டா காணப்படுவதில்லை
பசுங்கணிகம் காணப்படுவதில்லை
தற்காலிக சிறிய வாக்குவோல்கள் காணப்படுகிறது
டோனோபிளாஸ்டு காணப்படுவதில்லை
சென்ட்ரியோல்கள் காணப்படுகிறது
உட்கரு செல்லின் மையத்தில் காணப்படுகிறது
லைசோசோம்கள் காணப்படுகிறது
சேமிப்புப் பொருளாக கிளைக்கோஜன் உள்ளது
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |