DMK to arrest people who criticize the government
யாரும் ஆட்சியைப் பற்றி குறை கூறக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் திமுக உச்சகட்ட கோபத்தில் உயர் நீதிமன்றம் சவுக்கு வழக்கில் என்ன நடந்தது..!
திமுக ஆட்சி என்றால் எப்பொழுதுமே தொடர்ந்து மக்களுக்கு பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் ஊழல் என்பது முதன்மையாக இருந்தது.
அவருடைய மகன் ஆட்சிக் காலத்தில் மீம்ஸ் கிரியேட்டர்கள் மற்றும் youtube நபர்கள் கைது செய்யப்படுவது என்பது முதன்மையாக இருக்கிறது 2022 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி, அதிமுக, பாஜக மற்றும் youtube நபர்கள் கைது செய்யப்படுகிறார்கள்.
இவர்களைப் பற்றி யாராவது விமர்சனம் செய்தால் உடனடியாக கைது இல்லையென்றால் இவர் பாஜக சங்கீ என்று தெரிவித்து விடுகிறார்கள் டிடிஎஃப் வாசன், சாட்டை துரைமுருகன்,சவுக்கு சங்கர், அதிமுகவின் ஐடி வின் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் இப்படி தொடர்ந்து அரசியல் பலி வாங்குதல் என்பது நடைபெற்று வருகிறது.
யாராவது அரசை பற்றி குறை கூறினால் உடனடியாக திமுகவின் இணையதள கூலிப்படை அவர்களை நோட்டமிட்டு அவர்களுக்கு கடுமையான மிரட்டல் விடுக்கிறது இப்படி இருக்கும் சூழ்நிலையில் மக்கள் உச்சகட்ட கோபத்தில் இருக்கிறார்கள்.
முற்றுப்புள்ளி வைத்த சென்னை உயர் நீதிமன்றம்
பெண் காவல்துறையை ஆபாசமாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் மே மாதம் 4ம் தேதி தேனியில் தனியார் விடுதியில் கோவை சைபர் கிரைம் காவல்துறையால் கைது செய்யப்பட்டார் அதன் பிறகு அவர் மீது தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் ஒரே வழக்கிற்கு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கஞ்சா உட்பட வழக்கு பதிவு செய்யப்பட்டது அவருடைய வீட்டில் அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டு கஞ்சா இருந்தது என்று காவல்துறை தெரிவித்தது இதனை எதிர்த்து சவுக்கு சங்கர் வழக்கு பதிவு செய்தார்.
பல்வேறு வழக்கு பதிவுகள் நடைபெற்று வந்தது குறிப்பாக குண்டர் சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தார் அந்த வழக்கு விசாரணை இழுத்தடிக்கப்பட்டது.
உடனடியாக உச்ச நீதிமன்றத்திற்கு சென்றார் அங்கு வழக்கு விசாரணை நடைபெற்றது அப்போது நீதிபதிகள் சவுக்கு சங்கர் தேசத்திற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டாரா என கேள்விகளை எழுப்பினார்கள் இவர் பேசியது தவறு அதற்கான தண்டனை பெற்றுக் கொடுங்கள்.
இந்த குண்டா சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்கிறோம் வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடத்துங்கள் அங்கு கால தாமதம் செய்யப்பட்டால் உடனடியாக இங்கு மேல்முறையீடு செய்யுங்கள் நாங்கள் வழக்கு விசாரணையை நடத்துகிறோம் என தெரிவித்தார்கள்.
அதன்பிறகு உடனடியாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது கடந்த 7ம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
இன்று காலை 10:30 மணிக்கு வழக்கு விசாரணை மறுபடியும் வந்த பொழுது தீர்ப்பு வழங்கப்பட்டது சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் அடைத்தது ரத்து என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது ஆங்கிலேயர் போன்ற ஆட்சி முறை கருத்து சுதந்திரம் இருக்க வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் அரசை யாரும் விமர்சனம் செய்யக்கூடாது என்பதற்காக தடுப்பு காவல் சட்டம் கொண்டுவரப்பட்டது தற்போது அதனை அரசு பயன்படுத்தி வருகிறது மறுபடியும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
youtube சமூக வலைத்தளம் போன்றவற்றின் மூலம் மக்கள் குற்றங்களை உடனடியாக பதிவிட்டு விடுகிறார்கள் இது லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு சென்று விடுகிறது அரசிற்கு இது மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது.
இதனை அரசால் கட்டுப்படுத்த முடியவில்லை யூ டியூப் மற்றும் சமூக வலைத்தளம் வெளிநாட்டு நிறுவனங்கள் உடனடியாக வெளிநாடுகளில் தொடர்பு கொண்டு அதனை புரிய வைக்க முடியாது.
அந்த நிறுவனங்கள் அந்த நாட்டில் இருக்கக்கூடிய சட்டதிட்டங்களுக்கு ஏற்ப இயங்கும்,இந்தியாவிலும் இதனை கட்டுப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடைமுறைகளை வகுத்து வருகிறது.
திமுகவிற்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது
சவுக்கு சங்கர் தொடக்கத்திலிருந்து திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வந்தார், இவரை கட்டுப்படுத்த முடியாமல் திமுக திணறி வருகிறது குறிப்பாக உதயநிதி பற்றிய செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டுவிடுவார்.
இதனால் இவர் கைது செய்யப்பட்டு இவர் மீது 17 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது 10க்கு மேற்பட்ட வழக்குகளில் இவருக்கு ஜாமின் வழங்கப்பட்டு விட்டது தற்போது குண்டர் சட்டமும் ரத்து.
அறிவாளைக் காட்டி ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள் நாங்குநேரியில் என்ன நடக்கிறது..!
இனி சவுக்கு சங்கர் வெளியில் வருவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது அதன் பிறகு தான் திமுகவிற்கு மிகப்பெரிய தலைவலி குடைச்சலை கொடுக்கப் போகிறார்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |