Sickle cutting among school students at Tirunelveli Govt
திருநெல்வேலி அரசு பள்ளியில் பள்ளி மாணவர்களிடையே அரிவாள் வெட்டு,தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் புது விடியல் மக்களுக்கு பாதுகாப்பு என்பது துளியும் இல்லை..!
பொதுவாக திமுக ஆட்சிக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை என்பது நீடிக்கும் என்று சொல்வார்கள் தற்போது அது நடந்து வருகிறது திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு 523 வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு ஆட்சிக்கு வந்தது.
இப்பொழுது அதில் 90% நிறைவேற்றப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் தெரிவிக்கிறார்,தொடர்ந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு என்பது கட்டுப்பாட்டில் இல்லை.
தமிழகத்தில் இதுவரை நடந்து வந்த நிகழ்வுகள்
தேசிய கட்சியின் மாநில தலைவர் வெட்டிக்கொலை, மெத்தமைன் என்கின்ற போதை பொருள் கடத்திய திமுகவின் அயலக அணி தலைவர், நாங்குநேரியில் சக மாணவனை அறிவாலால் வெட்டிய மாணவர்கள்,விமான நிலையம் போராட்டம், திருவண்ணாமலையில் விவசாய நிலத்தில் சிப்காட் அமைப்பதற்கு நடந்த போராட்டம்.
விருதுநகர் மாவட்டத்தில் 2023 ஆம் ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 23 நபர்கள் உயிரிழந்தார்கள் இந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 69 நபர்கள் உயிரிழந்தார்கள் தொடர்ந்து கொலைகள் அரங்கேறி வருகிறது முக்கியமாக அரசியல் கட்சித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை.
யாராவது திமுகவை விமர்சனம் செய்து சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் பதிவிட்டால் உடனடியாக கைது தற்போது கார் பந்தயம் சென்னையில் நடத்தப்படுகிறது 42 கோடி தமிழக அரசு இதற்கு ஒதுக்கி உள்ளது ஆனால் இந்த பந்தயத்தால் யாருக்கு என்ன பயன் கிடைக்கப் போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை கேட்டால் நீதி பற்றாக்குறை ஆனால் இது போன்ற தேவையற்ற திட்டங்களுக்கு உடனடியாக பணம் ஒதுக்குவது போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டம், அரசு ஆசிரியர்களின் போராட்டம்.
தலித் மக்களின் மீது தொடர்ச்சியான தாக்குதல் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை அரசு பேருந்துகள் தொடர்ச்சியாக விபத்துகளில் சிக்குவது கட்டுப்பாடு இல்லாமல் இயங்குவதால், தொடர்ச்சியாக திமுக ஆட்சியில் இருக்கக்கூடிய குறைகளை பற்றி அடுக்கிக் கொண்டே போகலாம்.
விலைவாசி உயர்வு என்பது உச்சகட்டத்தில் இருக்கிறது, மின்சார கட்டணம் மூன்று முறை உயர்த்தப்பட்டுள்ளது, சொத்து வரி உயர்வு, உள்ளிட்ட அனைத்து வகையான கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு உள்ளது நேற்று சீர்காழியில் காவல்துறை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது இன்று திருநெல்வேலியில் பள்ளி மாணவன் சக மாணவனை அறிவாலால் வெட்டிய சம்பவம் கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மூன்று நாட்களுக்கு முன்புதான் கோவை மாநகராட்சி பள்ளியில் 3 மாணவர்கள் மது அருந்துவது குறித்து செய்திகள் வெளியாகி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியது அந்த செய்தி முடிவதற்குள் அடுத்து ஒரு செய்தி பள்ளியில் மாணவன் சக மாணவனை வெட்டினான் என்ற செய்தி வெளிவருகிறது.
இப்படி திரும்பிய பக்கமெல்லாம் பள்ளி குறித்தும் சர்ச்சையில் சிக்கிக் கொள்கிறது திமுக அரசு, திருநெல்வேலி மாவட்டம் திசையான்விளை அருகே விஜயநாராயணன் உள்ளது தெற்கு விஜய நாராயண பகுதியில் ஐ என் எஸ் என்னும் இந்திய கடற்படை தளம் அமைந்துள்ளது.
இந்த கடற்படை தளத்தின் வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி இயங்கி வருகிறது இந்தப் பள்ளியில் மூலைக்கரைப்பட்டி ய சேர்ந்த மாணவர் 9ம் வகுப்பு படித்து வருகிறார் அதேபோல் நாங்குநேரி சேர்ந்த இன்னொரு மாணவரும் 9ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில்தான் நேற்று மதிய உணவு இடைவேளை விடப்பட்டது அப்போது இரண்டு மாணவர்களுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு உள்ளது அதாவது ஒரு மாணவன் மற்றொரு மாணவன் மீது தண்ணீர் பீச்சி அடித்ததாக கூறப்படுகிறது அப்போது ஏற்பட்ட பிரச்சனை அங்கிருந்த நபர்கள் இரண்டு நபர்களை வீட்டுக்கு அனுப்பி உள்ளார்கள்.
இந்த நிலையில் தான் நாங்குநேரி சேர்ந்த மாணவன் இன்று தனது வீட்டில் இருந்து சிறியதாக அறிவாலையை எடுத்து தன்னுடைய பையில் வைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றுள்ளார் அதன் பிறகுதான் மூலக்கரைபட்டியை சேர்ந்த சக மாணவனை பள்ளியில் அறிவாளால் வெட்டி விட்டு தப்பித்து சென்றுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் தொடங்கி விட்டது ரேஷன் கடையில் பாமாயில் பருப்பு கிடைக்குமா..!
இதில் காயமடைந்த மாணவன் உடனடியாக மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது காயமடைந்த மாணவன் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மற்றவர்கள் தெரிவிக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு வள்ளியூரில் அரசு பள்ளியில் சாதி மோதலில் மாணவர்கள் இடையே மோதல் நடந்தது அப்போது 22 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு பள்ளி என்பது போதை பொருள் சாதி மோதல்கள் போன்ற இடமாக மாறிவிட்டது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |