August has started is palm oil dal available in the ration shop
ஆகஸ்ட் மாதம் தொடங்கி விட்டது ரேஷன் கடையில் பாமாயில் பருப்பு கிடைக்குமா..!
தமிழகத்தில் கடந்த மே மாதம் முதல் ரேஷன் கடையில் பாமாயில் மற்றும் பருப்பு விநியோகம் சரியாக இல்லை என்று பொதுமக்கள் தெரிவிக்கிறார்கள் இது பற்றி எதிர்க்கட்சிகளும் மற்றும் இடதுசாரி கட்சிகளும் போராட்டங்களையும் அறிவித்து நடத்தினார்கள்.
குறிப்பாக பாமாயில் மற்றும் பருப்பு மண்ணெண்ணெய் போன்றவை விநியோகங்கள் அவ்வப்போது இல்லை என பல்வேறு நபர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவிடுகிறார்கள்,இது பற்றிய ஆளும் கட்சியாக இருக்கும் திமுக தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால் டெண்டர் விட முடியவில்லை என தெரிவித்துள்ளது.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக 2011 முதல் 2021 வரை 10 ஆண்டுகள் நாங்கள் ஆட்சி செய்தோம் அப்பொழுதும் பல்வேறு தேர்தல் நடைபெற்றது தேர்தல் விதிமுறைகளும் அமலில் இருந்தது கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து மாதங்களிலும் ரேஷன் கடையில் வழங்கப்படும் உணவு பொருட்கள் சரியானதாகவும் தரமானதாகவும் இருந்தது.
தேர்தல் விதிமுறை அமலில் இருந்தாலும் அனைத்து உணவு பொருட்களும் மக்களுக்கு சரியாக கிடைத்தது ஆளும் திமுக அரசுக்கு நிர்வாகம் செய்ய தெரியவில்லை என குற்றச்சாட்டை முன்வைத்தது.
டெண்டர் விடப்படுவதற்கும் அறிவிப்பு வெளியிடப்பட்டது
ரேஷன் கடையில் பாமாயில் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்குவதற்கு டெண்டர் பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டது தற்போது ஆகஸ்ட் மாதம் தொடங்கிவிட்டது ஜூலை மாதம் பாமாயில் பருப்பு வழங்கப்படாத.
ரேஷன் அட்டைகளுக்கு இந்த மாதம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது இனிவரும் காலங்களில் அனைத்து உணவு பொருட்களும் தடை இன்றி கிடைப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் துவரம் பருப்பு பாமாயில் வழங்கப்படாத குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த மாதம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது சிறப்பு பொது விநியோக திட்டத்தின் மூலம் 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 1 கிலோ துவரம் பருப்பு, ரூபாய் 30 க்கும் ஒரு லிட்டர் பாமாயில் ரூபாய் 25 க்கும் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது.
அதனால் ஜூலை மாதத்தில் நீங்கள் பருப்பு பாமாயில் ரேஷன் கடையில் வாங்கவில்லை எனில் இந்த மாதம் நிச்சயம் உங்களுக்கு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |