Karnataka decides to release 2 lakh cubic feet of water in Cauvery
காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது உறுதி இரண்டு லட்சம் கன அடி நீரை திறக்க கர்நாடகா அரசு முடிவு..!
கர்நாடகா கேரளாவில் தற்போது தென்மேற்கு பருவமழை பொலிவு அதிகமாக இருக்கிறது கர்நாடகாவில் இருக்கக்கூடிய முக்கியமான அணைகள் கிருஷ்ணராஜ கபினி அணை முழுவதும் நிரம்பி விட்டது மேலும் பருவமழை தொடர்ந்து பொலிந்து வருவதால்.
அணைகளுக்கு வரும் உபரி நீரை அப்படியே திறந்து விட கர்நாடகா முடிவு செய்துள்ளதால் 2 லட்சம் கன அடி தண்ணீரை திறக்க கர்நாடகா முடிவு செய்துள்ளது.
கேரளா கர்நாடகா மாநிலங்களில் இருக்கக்கூடிய காவிரி மற்றும் அதன் துணை ஆறான கபிலா நதி நீர்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பொழிந்து வருகிறது தற்போது கேரளாவும் கர்நாடகாவும் மழை வெள்ளத்தில் மிதந்து வருகிறது கேரளாவின் வயநாட்டில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டு 400 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 57 நபர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது கர்நாடகாவில் இருக்கக்கூடிய அனைத்து அணைகளும் நிரம்பி விட்டது தொடர்ந்து மழை பொழிவு இருந்து கொண்டே இருக்கிறது தற்போது கிருஷ்ணராஜர் கே ஆர் எஸ் கபினி அணைகளுக்கு நீர்வரத்து 1.5 லட்சம் கனஅடியாக இருக்கிறது.
இந்த தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுகிறது தமிழகத்திற்கு இந்த நிலையில் அணைகளுக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால் மேலும் மலைப்பொழிவும் அதிகரிப்பதால் 2 லட்சம் கன அடி நீரை கர்நாடக அரசு திறந்து விட முடிவு செய்துள்ளது.
இதனால் நிச்சயம் தமிழ்நாட்டில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவது உறுதி ஏனென்றால் தமிழ்நாட்டில் மேட்டூர் அணையும் முழு கொள்ளளவை எட்டும் நிலையில் இருக்கிறது தற்போது மேட்டூர் அணையின் மொத்த நீர் இருப்பு 118 அடியை கடந்து விட்டது அணை நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
அணையில் இருந்து விவசாய பாசனத்திற்கு 12000 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது இதனால் தமிழ்நாட்டில் காவிரி ஆற்றின் கரையோரத்தில் இருக்கக்கூடிய 11 மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடப்பட்டுள்ளது கர்நாடக அரசு திறந்து விடும் 2 லட்சம் கன அடி தண்ணீரை.
அப்படியே தமிழ்நாடு அரசும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படுவதால் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது இதனால் மக்கள் மிகவும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |