What is the eligibility to get 1000 rupees in Tamil Puthalvan scheme
தமிழ் புதல்வன் என்ற திட்டம் மூலம் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்குவது ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படுகிறது என தமிழக அரசு அறிவித்துள்ளது..!
இந்தியாவில் மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் எப்பொழுதும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது இலவசமாக தரமானதாக இருக்க வேண்டும் என்று அரசு பல்வேறு நடைமுறைகளை செய்கிறது.
12ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவசமாக மிதிவண்டி, மடிக்கணினி, Scholarship, கல்லூரி படிப்பை முடித்த பெண்களுக்கு திருமணம் நடைபெறும் போது தாலிக்கு தங்கம் 4 கிராம் மற்றும் 8 கிராம் 25 ஆயிரம் ரூபாய் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் போன்ற திட்டங்கள் அதிமுக ஆட்சிக்காலத்தில் செயல்படுத்தப்பட்டது.
தற்போது அதுபோன்ற திட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு திமுக ஆட்சி காலத்தில் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது அதாவது 6ம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் தமிழ் வழி அல்லது ஆங்கில வழியில் படித்த மாணவ மாணவிகள் மற்றும் அரசு நிதி உதவி பெறும் தனியார் பள்ளியில் தமிழ் வழியில் படித்த.
மாணவ மாணவிகள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு கல்லூரியில் சேரும்போது அவர்களுடைய உயர்கல்வி தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மாதம் 1000/- ரூபாய் வழங்கப்படுகிறது என திமுக அரசு தெரிவித்து பெண்களுக்கு இந்த திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
தற்போது அதே போன்று மாணவர்களுக்கும் இந்த திட்டம் இந்த ஆண்டு ஆகஸ்ட் முதல் நடைமுறை செய்யப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது இதற்காக 360 கோடி ரூபாய் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் மாணவர்கள் விண்ணப்பிப்பது எப்படி இந்த திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பம் பதிவிறக்கம் செய்து நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும்.
இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமான தகவல்கள் மட்டும் வெளியிடப்பட்டுள்ளது அதற்கான விண்ணப்ப படிவம் போன்றவை வெளியிடப்படவில்லை மிக விரைவாக வெளியிடப்படும்.
இதற்கு தேவையான ஆவணங்கள்
ஆதார் அட்டை
புகைப்படம்
ரேஷன் அட்டை
பள்ளி சான்றிதழ்
வங்கி கணக்கு புத்தகம்
இந்த திட்டத்தில் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்
நீங்கள் இந்த திட்டத்தில் விண்ணப்பம் செய்தால் உங்களைப் பற்றிய அனைத்து தகவல்களும் சேகரிக்கப்படும் நீங்கள் அரசு பள்ளியில் படித்த நபரா என்று சேகரிக்கப்படும் அதன் பிறகு நீங்கள் அரசு கல்லூரியில் சேர்ந்திருக்கிறீர்களா என்பதும் பற்றிய தகவல்களும் சேகரிக்கப்படும்.
நிலம் வாங்கும் போதும் விற்பனை செய்யும் போதும் இதனை கருத்தில் கொள்ளுங்கள்..!
முக்கியமாக இளங்கலை, மருத்துவம், ஐடிஐ, பாலிடெக்னிக், தொழில் கல்வி போன்ற படிப்புகள் வகையிலும் மாணவர்களுக்கும் மாதம் 1000/- ரூபாய் வழங்கப்படும்.
தொலைதூர கல்வி, அஞ்சல் வழி கல்வி மற்ற மாநிலங்களில் படித்த மாணவ மாணவிகளுக்கு இந்த திட்டத்தில் மாதம் 1000/- ரூபாய் வழங்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |