Typewriting to get Special Marks in TNPSC Group 4 Exam
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெறுவதற்கு டைப்ரைட்டிங் மாணவ சேர்க்கை பல மடங்கு அதிகரிப்பு..!
TNPSC குரூப் 4 தேர்வு மூலம் அரசு வேலைவாய்ப்பு பெறுவதற்கு டைப்ரைட்டிங் பயிற்சிக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்கப்படுவதால் டைப்ரைட்டிங் பயிற்சி பெறுவதற்கு மாணவர்களின் சேர்க்கை தமிழக முழுவதிலும் திடீரென்று 10 முதல் 15 சதவீதம் உயர்ந்துள்ளதாக பயிற்சி நடத்தும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு தொழில்நுட்பக் கல்வி இயக்குனரகம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் மொழிகளில் டைப் ரைட்டிங் சுருக்கெழுத்து தேர்வுகளை நடத்தி தேர்ச்சி பெறுபவர்களுக்கு அரசு சான்றிதழ் வழங்குகிறது.
TNPSC குரூப் 4 தேர்வு எழுதுபவர்களுக்கு இந்த தொழில்நுட்ப சான்றிதழ் கட் ஆப் மதிப்பெண்களை அதிகப்படுத்துவதற்கு மற்றும் வேலை வாய்ப்பு பெறுவதற்கும் மிகவும் முக்கியத்துவமாக இருக்கிறது.
இதனால் தமிழகம் முழுவதும் தற்போது டைப்ரைட்டிங் மற்றும் சுருக்கெழுத்து தகுதி சான்றிதழ் பெறுவதற்கு மாணவர்களின் ஆர்வம் அதிகரித்து வருகிறது கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தேர்வு குறித்த அறிவிப்பு சரியாக வெளியிடப்படாமல் இருந்த காலத்தில் இந்த டைப்ரைட்டிங் மற்றும் சுருக்களுக்கு பயிற்சி பெறுபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
ஆனால் இந்த ஆண்டு தேர்வு குறித்து பல்வேறு அறிவிப்புகள் தொடர்ந்து வெளிவருவதால் திடீரென்று டைப்ரைட்டிங் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
எப்பொழுது தேர்வு நடத்தப்படுகிறது
சுருக்கெழுத்து உயர்வேகம் தேர்வு வருகின்ற ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி மற்றும் 11ஆம் தேதி நடக்கிறது, சுருக்கெழுத்து இளநிலை முதுநிலை தேர்வு ஆகஸ்ட் மாதம் 24 மற்றும் 25ஆம் தேதிகளில் நடக்கிறது.
TNPSC தேர்வுக்கான பொது அறிவு நதிகள் பாயும் மாநிலங்கள் பட்டியல்கள்..!
சுருக்கெழுத்து, இளநிலை,முதுநிலை தேர்வுகள் ஆகஸ்ட் 23ஆம் தேதி நடக்கிறது இந்த டைப்ரைட்டிங் இளநிலை, முதுநிலை, உயர்வேகம், ஆகிய தேர்வுகள் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது.
தேர்வு முடிவுகள் அக்டோபர் 29ஆம் தேதி வெளியிடப்படலாம் என தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனராக அதிகாரப்பூர்வமாக ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |