821 கோடி ரூபாய் வருவாய் அதிகரிப்பு மற்றும் தமிழ்நாடு பதிவுத் துறையில் பல புதிய மாற்றங்கள்..!Increase in revenue and many new changes in TN registration department

Increase in revenue and many new changes in TN registration department

821 கோடி ரூபாய் வருவாய் அதிகரிப்பு மற்றும் தமிழ்நாடு பதிவுத் துறையில் பல புதிய மாற்றங்கள்..!

பத்திரப்பதிவுத் துறை பற்றி தற்போது பல புதிய செய்திகள் வெளி வருகிறது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 821 கோடி ரூபாய் கூடுதலாக வருவாய் அதிகரித்துள்ளது என பற்ற பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கு மிக முக்கிய காரணம் பொதுமக்கள் முகூர்த்த நாட்களில் அதிகளவில் பத்திரப்பதிவு செய்கிறார்கள் அதுபோன்ற நாட்களில் காலை முதல் மாலை வரை குறைந்தது ஒரு பத்திரப்பதிவு அலுவலகத்தில் 150 டோக்கன்கள் வழங்க வேண்டும் என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

பதிவுக்கு வரும் சொத்துக்களின் பட்டாக்கள் உள்ளிட்ட வருவாய்த்துறை ஆவணங்கள் முறையாக உள்ளதா என்று சரி பார்த்து பதிவு செய்ய வேண்டும் அதில் குறைகள் இருக்கிறது என்று காரணத்தை தெரிவித்து நிராகரிக்க கூடாது என உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

வருவாய் ஆவணங்களாக இருக்கும் பட்டா உள்ளிட்ட சான்றிதழ்களில் பலமுறை சரிபார்க்க வேண்டும் எந்த காரணத்தையும் காண்பித்து பொது மக்களை அலைக்கழிக்கக்கூடாது காலம் தாழ்த்தக்கூடாது விவசாய நிலங்களை மனை பிரிவாக பதிவு செய்யக்கூடாது.

இந்த விஷயங்களில் சார் பதிவாளர்கள் முறையாக செயல்படுகிறார்களா என்பதை மாவட்ட பதிவாளர்கள் மற்றும் டிஐஜிக்கள் உறுதி செய்ய வேண்டும் என பல புதிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

புதிய மாற்றங்கள் மூலம் பொதுமக்கள் பயனடைந்துள்ளார்கள்

ஒருவருடைய நிலத்தை போலியாக யாரும் பத்திர பதிவு செய்யக்கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியுடன் இருக்கிறது அதற்கு பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளது பத்திரப்பதிவு செய்யும் நபர்கள் ஆதார் அட்டை, சமீபத்திய புகைப்படம், நிலத்தின் ஜிபிஎஸ் புகைப்படம், உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை வழங்க வேண்டும் முக்கியமாக வில்லங்கச் சான்றிதழ் போன்ற ஆவணங்கள் கட்டாயம் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக விற்பனை செய்வதை தமிழக அரசு முழுவதும் தடுக்க வேண்டும் என உறுதியுடன் இருக்கிறது இதற்கு பத்திரப்பதிவு அலுவலகங்களில் சார்பதிவாளர் அலுவலர்களுக்கு கண்டிப்புடன் கட்டளை வழங்கப்பட்டுள்ளது.

வருவாய் அதிகரிப்பதற்கு முகூர்த்த நாட்களில் காலை 5 மணி முதலே டோக்கன்கள் வழங்கப்பட வேண்டும் அன்றைய நாட்களில் குறைந்தது 150 டோக்கன்கள் வழங்க வேண்டும் பொது மக்களை அலைக்கழிக்க கூடாது.

விற்பனை செய்யும் நிலத்திற்கு வில்லங்கம் எதுவும் இல்லை மற்றும் உட்பிரிவு இல்லை என்றால் உடனடியாக பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும்.

உட்பிரிவு உடன் கூடிய நிலங்களுக்கு ஒரு மாதத்திற்குள் பட்டாக்கள் வழங்கப்பட வேண்டும்

நிலத்தின் அசல் ஆவணம் தொலைந்துவிட்டது அதற்கு நகல் ஆவணம் வேண்டும் என்று வரும் பொது மக்களுக்கு உரிய ஆவணங்கள் பெற்றுக்கொண்டு விரைவில் நகல் ஆவணங்கள் வழங்கப்பட வேண்டும்.

இந்த அடிப்படை தகவல்கள் தெரியாமல் TNPSC தேர்வு எழுத வேண்டாம்..!

பத்திரப்பதிவு செய்யும் நபர்களுக்கு அடுத்த நாளே குறுஞ்செய்தி மூலம் அது குறித்த தகவல்கள் வழங்கப்பட வேண்டும் என இப்படி பல்வேறு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது.

இதன் மூலம் பொது மக்களுக்கு தங்களுடைய நிலங்கள் பத்திரமாக இருக்கும் என நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசு உறுதியுடன் இருக்கிறது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment