Dont write TNPSC exam without knowing this basic information
இந்த அடிப்படை தகவல்கள் தெரியாமல் TNPSC தேர்வு எழுத வேண்டாம்..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் போட்டித் தேர்வில் நீங்கள் கலந்து கொள்வதற்கு முன்பு சில அடிப்படை தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த போட்டி தேர்வில் எளிமையாக வெற்றி பெற்று அரசு வேலைக்கு சென்று விடலாம் என்று நீங்கள் கற்பனை செய்ய வேண்டாம் மிகவும் கடினம் போட்டியாளர்களின் எண்ணிக்கை 20 லட்சம் வரை உயர்கிறது ஒரு பணியிடத்திற்கு 380 நபர்கள் போட்டியிடுகிறார்கள்.
சரியான திட்டமிடல் இல்லாமல் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக போட்டித் தேர்வில் கலந்து கொண்டு பல லட்சம் ரூபாய் செலவு செய்து வெற்றியின் பெறாமல் வேலை வாய்ப்பு கிடைக்காமல் 35 வயதை கடந்த நபர்கள் அதிகம்.
தேர்வில் வெற்றி பெற்று ஆவணங்கள் சரிபார்ப்பு வரை சென்று விட்டு வேலை கிடைக்காமல் இருக்கும் நபர்களும் அதிகம் சில நபர்கள் முதல் முயற்சியில் அரசு வேலை வாய்ப்பை பெற்று விடுவார்கள் சில நபர்கள் 5 ஆண்டுகள் கழித்து வேலை வாய்ப்பு பெறுவார்கள் சில நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்காமல் போய்விடும்.
அதுபோன்ற நபர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாக இருக்கும் எனவே போட்டித் தேர்வில் நீங்கள் கலந்து கொள்வதற்கு முன்பு உங்களைப் பற்றி நீங்கள் நன்றாக சிந்தித்து சரியான திட்டமிட்டால் மட்டுமே போட்டி தேர்வு வெற்றி பெற்று அரசு வேலை வாய்ப்பு பெற முடியும்.
இது தெரிந்து கொள்ளாமல் போட்டி தேர்வில் கலந்து கொள்ளாதீர்கள்
முதலில் நீங்கள் பள்ளியில் எப்படி படித்தீர்கள் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் நீங்கள் நன்றாக படிக்கும் நபராக இருந்தால், நன்று சுமாராக படிக்கும் நபர் அல்லது படிப்பில் அவ்வளவு நாட்டம் இல்லை.
இதில் நீங்கள் எந்த வகை என்பதை நீங்களே உறுதி செய்து கொள்ளுங்கள் உங்களைவிட சரியாக புரிந்து கொள்ள இந்த உலகில் மற்ற நபர்கள் இல்லை உங்களுடைய மனசாட்சிக்கு சரியாக தெரியும் நீங்கள் பள்ளியில் எப்படி படித்தீர்கள் என்று.
பள்ளியில் நீங்கள் நன்றாக படித்த நபராக இருந்தால் முதல் 5 இடங்களுக்குள் தரவரிசை பட்டியலில் இடம் பெற்ற நபராக இருந்தால் நீங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் GROUP-1, GROUP-2 தேர்வுக்கு தைரியமாக தயாராகலாம்.
இதற்கு சில அடிப்படை காரணங்கள் இருக்கிறது பள்ளியில் நன்றாக படித்த நபர்கள் மட்டுமே போட்டி தேர்வில் அனைத்து பாடப்பகுதிகளிலும் நன்றாக புரிந்து கொண்டு படித்து வெற்றி பெறுகிறார்கள் என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
பள்ளியில் சுமாராக படித்த நபராக இருந்தால் நீங்கள் GROUP-4, GROUP-5, GROUP-6, GROUP-7, GROUP-8 போன்ற தேர்வுகளுக்கு போட்டியிடலாம்.
பள்ளியில் நீங்கள் நன்றாக படிக்கவில்லை என்றால் நீங்கள் போட்டி தேர்வுகளுக்கு செல்ல வேண்டாம் நேரடியாக தொழில் செய்வதற்கு சென்று விடுங்கள் உங்களுக்கு சிறப்பான வாழ்க்கை அமையும்.
பள்ளியில் நன்றாக படித்த நபர்கள் Engineering, Medical, CA, Agriculture தொழில் கல்வி படித்திருப்பார்கள் கல்லூரியில் அது போன்ற நபர்கள் முதல் முயற்சி அல்லது இரண்டாவது முயற்சியில் GROUP-1, 2, UPSC போன்ற தேர்வுகளை எளிமையாக வெற்றி பெற்று அரசு வேலைவாய்ப்பிற்கு சென்று விடுவார்கள்.
போட்டித் தேர்வில் தொழில் கல்வி படித்த நபர்கள் எளிமையாக வெற்றி பெற்று அரசு வேலைக்கு செல்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது.
சில நபர்கள் தமிழ், ஆங்கிலம், அறிவியல், தாவரவியல், விலங்கியல், சமூக அறிவியல், போன்ற பாடங்களில் 100க்கு 90 மதிப்பெண்கள் பெறுவார்கள் ஆனால் கணிதத்தில் குறைவான மதிப்பெண்கள் பெறுவார்கள் அது போன்ற நபர்கள் போட்டி தேர்வில் வெற்றி பெற முடியாமல் திணறி வருகிறார்கள்.
காரணம் ஒவ்வொரு போட்டி தேர்விலும் கணிதத்தில் குறைந்தபட்சம் 20 வினாக்கள் கேட்கப்படுகிறது ஒரு வினாவிற்கு 1.5 மதிப்பெண் என்றால் 20 வினாவிற்கு 30 மதிப்பெண்கள் ஒரு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆயிரக்கணக்கான நபர்கள் உங்களைவிட முன் நோக்கி சென்று விடுவார்கள் எனவே கணிதத்தில் தடுமாறும் நபர்களுக்கு போட்டித் தேர்வு மிக கடினம்.
உண்மையில் உங்களுடைய திறமை என்ன உங்களுக்கு என்ன பாடப்பகுதி நன்றாக வரும் உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு கல்லூரி முடித்தவுடன் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை தொடங்கலாம்.
சில நபர்கள் தனியா துறையில் வேலை செய்து கொண்டு போட்டி தேர்வுக்கு தயாராகுவார்கள் அதில் ஈடுபாடுடன் இருக்கும் நபர் நிச்சயம் வெற்றி பெற்ற அரசு வேலை வாய்ப்பு பெற்று விடுவார் சில நபர்கள் போட்டி தேர்வில் தயாராகிக் கொண்டு இணையதளம் YouTube போன்றவற்றை நடத்திக் கொண்டு வருமானம் பெற்றுக் கொண்டு போட்டி தேர்வில் கலந்து கொள்வார்கள்.
அது போன்ற நபர்களுக்கும் பிரச்சனை இல்லை மாதம் வருமானம் கிடைக்கும் ஆனால் கல்லூரி பள்ளியில் நன்றாக படிக்காமல் போட்டித் தேர்வு மட்டும் நம்பிக்கை கொண்டு இருக்கும் நபர்களுக்கு சற்று வாழ்க்கையில் வெற்றி கிடைக்கலாம் அல்லது தோல்வி கிடைக்கலாம்.
உங்களை நீங்கள் நன்றாக உணர்ந்து கொள்ளுங்கள் உங்களுடைய கற்றல் திறன் எப்படி இருக்கிறது உங்களுக்கு எதில் ஆர்வம் இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டு நீங்கள் போட்டி தேர்வில் கலந்து கொள்ளலாம்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |