TNPSC Road inspector Job Full Details 2024
TNPSC சாலை ஆய்வாளர் பணியின் முழு விவரங்கள் 2024..!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் தேர்வுகளில் மிக முக்கியமானது சாலை ஆய்வாளர் பணி தேர்வு இந்த தேர்வு தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய காலி பணியிடங்களை பொறுத்து அறிவிக்கப்படுகிறது.
தேர்வுக்கான கல்வி தகுதி, வயது விவரம், சம்பள முறை, தேர்ந்தெடுக்கும் முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இந்த கட்டுரையில் முழுமையாக காணலாம்.
இந்தத் தேர்வு குரூப்-4 தேர்வுக்கு இணையான தேர்வு, சம்பளமும் இணையான சம்பளம் மிக எளிமையான தேர்வு கல்வித் தகுதி என்பது தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட சிவில் வரைவுத் துறையில் ஐடிஐ சான்றிதழ் பெற்று இருந்தால் போதும்.
வயது வரம்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் சாலை ஆய்வாளருக்கான விண்ணப்பிக்க வயது வரம்பில் பல்வேறு மாற்றங்கள் இருக்கிறது.
வயது வரம்புகளின் SC,SC(A)s,STs,MBCs,/DCs,BC,(OBCM)s,BCMs, விண்ணப்பதாரர்களின் போன்ற அனைத்து பிரிவுகளில் இருக்கக்கூடிய கணவனை இழந்த பெண்கள் மற்றும் விவாகரத்து பெற்ற பெண்கள் போன்றவர்களுக்கு வரம்பு இல்லை பொது பிரிவினருக்கு 37 வயது முடிந்திருக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு செய்யும் முறை
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வுகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) அறிவித்துள்ளது.
சம்பள விவகாரம்
இந்த பணியிடத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் (TNPSC)
அறிவித்துள்ள அறிவிப்பின்படி ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையில் சாலை ஆய்வாளர்களாக பணியமர்த்தப்படுவார்கள் மற்றும் குறைந்தபட்சஊதியம் 19,500/- அதிகபட்சம் ஊதியம் 71,900/- நிலை 8 கீழ் ஊதியம் வழங்கப்படும்.
சில முக்கியமான பகுதிகள் TNPSC பொது அறிவு அரசியல் அறிவியல் பாடத்திட்டம்..!
இந்த பணியிடம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியிடப்படும் என்று சரியாக தெரியவில்லை இந்த பணியிடத்திற்கு (ITI) முடித்த நபர்கள் விண்ணப்பிக்க முடியும், 10ம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, கலை அறிவியல் முடித்த, நபர்கள் விண்ணப்பிக்க முடியாது இந்த பணியிடம் குரூப்-4 தேர்வுக்கு இணையானது மிக எளிமையாக இருக்கும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |