History of Pallavas in TNPSC Group 4 History Section
TNPSC Group 4 வரலாற்றுப் பகுதியில் பல்லவர்களின் வரலாறு..!
போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் மிக எளிமையானவை குறிப்பாக வரலாற்று பகுதி என்பது எளிமையாக புரிந்து கொள்ளலாம் தமிழகத்தின் வரலாறு என்பது பல சுவாரசியங்களை உள்ளடக்கியது சேர, சோழ, பாண்டியர், பல்லவர்கள் போன்றவர்களின் வரலாற்று கலை பற்றி நிச்சயம் கேள்விகள் இருக்கும்.
சமச்சீர் பாட புத்தகத்தில் இருந்து தான் 95 சதவீத கேள்விகள் கேட்கப்படுகிறது முக்கியமாக 6ம் வகுப்பு முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள புத்தகங்களை மட்டும் படித்தால் போதும் வரலாறுகளைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள சேரர்கள் சோழர்கள் பாண்டியர்கள் பல்லவர்களின் குறிப்பேடுகளை நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
குறிப்பாக இவர்களைப் பற்றிய தகவல்கள் இன்றும் தமிழகத்தில் அனைத்து இடங்களிலும் கிடைக்கிறது ஒவ்வொரு மாவட்ட நூலகங்களிலும் இவர்களைப் பற்றிய வரலாற்று புத்தகங்கள் அதிகமாக இருக்கிறது அதனை நீங்கள் ஒரு முறை நன்றாக படித்து புரிந்து கொண்டால் போதும் எளிமையாக விடை அளிக்கலாம்.
பல்லவர்கள் பற்றிய வரலாற்று குறிப்புகள்
ஆட்சிப் பகுதி – தொண்டை மண்டலம் (காஞ்சிபுரம்)
தலைநகரம் – காஞ்சிபுரம்
துறைமுகம் – மாமல்லாபுரம்
சின்னம் – காளை நந்தி
முற்காலப் பல்லவர்கள் – கிபி 250-350 வரை
பிராகிருத மொழியில் பட்டங்களை வெளியிட்டனர்
முக்கிய அரசர்கள் – சிவஸ்கந்தவர்மன், விஜய ஸ்கந்தவர்மன் இடைக்கால மன்னர்கள் – காலம் கிபி 350-550
வடமொழியில் பட்டங்களை வெளியிட்டனர்
முக்கிய அரசர் – விஷ்ணுகோபன்
சிம்ம விஷ்ணு – பல்லவ ஆட்சியின் தோற்றுவித்தவர்
சிறப்பு பெயர் – அவினி சிம்மன் (உலகின் சிங்கம்)
இந்து சாஸ்திர கோட்பாடுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது
பெண்கள் உயர்வாக மதிக்கப்பட்டார்கள்
வர்னாசிரம் கடுமையாக பின்பற்றப்பட்டது
நீதி முறை
மூன்று வகையான நீதிமன்றம்
தலைமை நீதிமன்றம் – தருமாசனம்
நகரம் – அதிகரணங்கள்
கிராமம் – காரணங்கள்
பொருளாதாரம்
காஞ்சிபுரம் முக்கிய வணிக மையம்
வணிகர் சங்கம் – மணி கிராமம் எனப்பட்டது
அயல்நாட்டு வணிக குழு – நானாதேசிகர் எனப்பட்டது
பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்தது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |