அறிவாளைக் காட்டி ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள் நாங்குநேரியில் என்ன நடக்கிறது..!3 students threatened teachers with weapons in Nanguneri

3 students threatened teachers with weapons in Nanguneri

அறிவாளைக் காட்டி ஆசிரியர்களுக்கு மிரட்டல் விடுத்த பள்ளி மாணவர்கள் நாங்குநேரியில் என்ன நடக்கிறது..!

திராவிட மாடல் ஆட்சிக் காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் நெல்லை வட்டம் தற்போது ஒவ்வொரு வாரமும் முக்கிய இடம் பெறுகிறது.

இங்கு பள்ளியில் நடக்கக்கூடிய ஜாதி வன்முறைகளை கட்டுப்படுத்த திராவிட மாடல் அரசுக்கு துணிவு இல்லை கடந்த ஆண்டு 10ம் வகுப்பு படிக்கும் மாணவனை சகாயம் மாணவர்கள் ஒன்றிணைந்து கடுமையாக ஆயுதம் மூலம் வெட்டினார்கள்.

இதனால் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயம் பெற்ற அந்த மாணவர் 6 மாதம் சிகிச்சை பெறவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது, நாங்குநேரியில் குறிப்பாக அரசு பள்ளி மாணவர்களிடையே சாதி சம்பந்தமான பிரச்சனைகள் அதிகரித்து வருகிறது.

நெல்லை மாவட்டம் நாங்குநேரியில் சங்கர் ரெட்டியார் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது இப்பள்ளியில் நாங்குநேரி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த பள்ளியில் வகுப்பறையில் சில மாணவர்கள் பென்சுகளை கைகளால் சத்தமாக தட்டி சக மாணவர்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தி உள்ளார்கள் அவர்களுடைய வகுப்பறையில் இருக்கக்கூடிய மாணவிகளுக்கும் கேலி கிண்டல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதை பார்த்த ஆசிரியர்கள் அந்த மாணவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்கள் இதனால் ஆத்திரம் அடைந்த அந்த மாணவர்கள் தங்களுடைய பைகளில் வைத்திருந்த சிறிய ரக கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களை எடுத்து ஆக்ரோஷமாக ஆசிரியர்களை மிரட்டி உள்ளார்கள்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் உடனடியாக தலைமை ஆசிரியரிடம் புகார் தெரிவித்துள்ளார் தலைமை ஆசிரியர் உடனடியாக நாங்குநேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார் சங்கர் ரெட்டியார் பள்ளிக்கு விரைந்து வந்த காவல்துறை.

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டம் நேரடி வேலைவாய்ப்பு பயிற்சி மையம்..!

தீவிரமான விசாரணை நடத்தி 7 மாணவர்கள் மீது வழக்கு பதிவு செய்தார்கள் அந்த மாணவர்களை நெல்லை இளைஞர் நிதிகுழு மத்தியில் ஆஜர் படுத்தினார்கள் முக்கியமான 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டு இளைஞர்கள் நிதி குழு இல்லத்திற்கு அனுப்பப்பட்டார்கள்.

மற்ற 4 மாணவர்களுக்கும் பெற்றோர்களை வரவழைத்து அறிவுரை கூறி கண்டித்து அனுப்பி வைத்தார்கள் நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே பள்ளி மாணவர்களிடம் சாதி சம்பந்தமான வன்மம் அதிகரித்து வருகிறது ஒவ்வொரு வாரமும் இது பற்றிய செய்திகள் வெளி வருகிறது.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment