12 Rasikalukku Aavani Month Rasi Palangal 2024
இந்த ஆவணி மாதத்தில் 12 ராசிகளுக்கான ராசி பலன்கள் எந்த ராசிக்கு அதிகமான பண வரவுகள் இருக்கும்..!
இந்த பிரபஞ்சத்தில் இருக்கக்கூடிய அனைத்து உயிரினங்களுக்கும் வானில் ஏற்படக்கூடிய மாற்றங்கள் மூலம் அவர்களுடைய வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது நம்மளுடைய தமிழ் கலாச்சாரத்தின் படி.
தமிழ் மாதத்தின் அடிப்படையில் ஜோதிடம் கணிக்கப்பட்டுள்ளது தற்போது ஆடி மாதம் முடிந்து விட்டது ஆவணி மாதம் தொடங்கிவிட்டது 12 ராசிகளுக்கான ஆவணி மாதத்திற்கான ராசி பலன்கள் இங்கே காணலாம்.
மேஷம் ராசி
மேஷம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அதிகமான வெற்றிகள் கிடைக்கும் உங்களுடைய பொருளாதார சிறப்பான முறையில் முன்னேற்றம் அடையும் நீண்ட காலமாக வீட்டில் தடைப்பட்டு வந்த சுப நிகழ்ச்சிகள் கைகூடும்.
குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு இந்த மாதம் நல்ல செய்திகள் தேடி வரும் இந்த மாதம் உங்களுக்கு தொட்டது அனைத்தும் வெற்றிகளாக கிடைக்கும் வேலை வணிகம் தொழில் போன்றவற்றில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கிறது.
நீண்ட காலமாக நீங்கள் எதிர்பார்க்க இலக்கை அடைய முடியும் புதிதாக வெளிநாட்டில் வேலை தேடுபவர்களுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும், தொழிலைப் பொறுத்தவரை உங்களுடைய உழைப்புக்கு ஏற்ப லாபம் கிடைக்கும்.
ரிஷபம் ராசி
ரிஷபம் ராசி நண்பர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சியாக இருக்கும் பொருளாதாரம் சிறப்பாக அமையும் நீங்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்த பண வரவு கிடைத்துவிடும் நண்பர்களிடம் அல்லது உறவினர்களிடம் நீங்கள் கொடுத்த உடைய பணம் இழுபறியில் இருந்தால் நிச்சயம் இந்த மாதம் நல்ல முறையில் கிடைப்பதற்கு அதிக வாய்ப்புகள்.
அரசாங்க வேலைக்கு முயற்சி செய்யும் நபர்களுக்கு நல்ல சூழ்நிலை இருக்கிறது வேலை பொருத்தவரை வேலை பளு அதிகமாக இருக்கும் அதனை திறம்பட செய்வதன் மூலம் எதிர்பார்த்த பொருளாதாரம் கிடைக்கும் புதிதாக தொழில் தொடங்க வேண்டும் என முயற்சி செய்தால் இந்த மாதம் நன்றாக இருக்கும்.
மிதுனம் ராசி
மிதுனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நினைத்தது அனைத்தும் நடந்து முடியும் பொருளாதாரம் அதிகமாக இருக்கும் குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் மகிழ்ச்சிகள் அதிகரிக்கும் நீங்கள் பணம் கொடுக்கல் வாங்குதலில் மிக கவனமாக இருக்க வேண்டும்.
உங்களுடைய பழைய வீட்டை அல்லது பழைய நிலத்தில் ஏதாவது பிரச்சனை இருந்தால் அது தீர்வதற்கு இந்த மாதம் வாய்ப்புகள் இருக்கிறது உங்களுடைய தொழில் வணிகம் வேலை பொறுத்தவரை நிச்சயம் வேலை பல அதிகம் வெளியிடங்களுக்கு பயணம் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
எதிர்பார்த்து அளவிற்கு லாபம் கிடைப்பதற்கு சற்று கூடுதலாக நீங்கள் உழைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது, தொழில் ரீதியாக எடுக்கக்கூடிய முடிவுகளை நன்றாக யோசித்து செய்யுங்கள்.
கடகம் ராசி
கடகம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சற்று ஏற்றத்தாழ்வுடன் இருக்கும் நீங்கள் அமைதியை கடைப்பிடித்தால் மட்டுமே பொருளாதார இழப்பு இல்லாமல் வீண் சண்டை இல்லாமல் வாக்குவாதம் இல்லாமல் இந்த மாதத்தை கடக்க முடியும் செலவுகள் திடீரென்று அதிகரிக்கும் பணி செய்யும் இடத்தில் தேவையில்லாத வாக்குவாதங்கள்.
கருத்து வேறுபாடுகள் ஏற்படும் வீட்டிலும் அமைதி நிலவு வேண்டும் என்றால் நீங்கள் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும் இந்த மாதம் உங்களுக்கு அவ்வளவு நன்றாக அமையவில்லை தொழிலிலும் எதிர்பார்த்த அளவில் லாபம் கிடைக்காது.
சிம்மம் ராசி
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகச் சிறப்பாக இருக்கும் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு பொருளாதாரம் உயர்ந்துவிடும் பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த சுப காரியங்கள் அதிகமாக நடைபெறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
நீங்கள் பிறருக்கு உதவி செய்வதன் மூலம் தான தர்மம் செய்வதன் மூலம் உங்களுக்கு அதிகமான நன்மைகளை ஏற்படும் குறிப்பாக முதியோர்களுக்கு, பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு, பசு, நாய், பூனை, பறவைகள், குரங்குகள், போன்ற உயிரினங்களுக்கு நீங்கள் உணவு அளித்து வந்தால் மிகச் சிறப்பாக இருக்கும்.
வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும், தேவை இல்லாமல் யாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் எதிர்பார்த்த அளவில லாபம் கிடைக்கும் தொழிலை விரிவு படுத்துவதற்கு எடுத்து அனைத்து முயற்சிகளும் கைகூடும்.
கன்னி ராசி
கன்னி ராசி நண்பர்களுக்கு இந்த மாதம் அலைச்சல்கள் ஏற்படும் பொருளாதாரத்தை பொருத்தவரை மந்தமாக இருக்கும் என்றாலும் செலவுகளை சமாளித்து விடுவீர்கள் வீண் செலவுகள் நிச்சயம் ஏற்படும் பிள்ளைகள் மற்றும் மனைவிகள் மூலம் தேவையில்லாமல் மருத்துவ செலவுகள் ஏற்படும்.
குடும்பத்தில் இருக்கும் நபர்களுடன் அனுசரித்து பொறுமையாக கடந்து சென்றால் இந்த மாதத்தை இழப்பீடு இல்லாமல் நீங்கள் தவிர்த்து விடலாம் உங்களுடைய வேலை தொழில் வணிகம் போன்றவற்றில் வேலை பல அதிகமாக இருக்கும்.
நீண்ட நேரம் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது, வெளியூர் பயணங்கள் இருக்கிறது அலைச்சல் இருக்கிறது போட்டிகளும் அதிகமாக இருக்கும் இந்த மாதத்தை நீங்கள் அமைதியாக கடந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
துலாம் ராசி
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகவும் மகிழ்ச்சிகர மாதமாக அமையும் பொருளாதாரம் நல்ல உயர்வில் இருக்கும் உங்களுடைய நீண்ட கால எதிர்பார்ப்பு பூர்த்தி அடையும் வீண் செலவுகள் குறையும் ஆனால் திடீரென்று மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.
தொழில், வணிகம், வேலை, பொருத்தவரை வேலை பளு பல மடங்கு அதிகம் நீங்கள் நீண்ட நேரம் இரவில் வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கிறது, உழைப்பிற்கு ஏற்ப நிச்சயம் பொருளாதார உயர்வு இருக்கும் புதிய தொழில் தொடங்க முயற்சி செய்தால் நன்றாக வெற்றி கிடைக்கும் இந்த மாதத்தில்.
விருச்சிகம் ராசி
விருச்சிகம் ராசி நண்பர்களுக்கு இந்த மாதம் சாதகமாக இருக்கிறது பொருளாதாரம் சற்று மந்தமாக இருந்தாலும் அனைத்தும் சமாளித்து விடுவீர்கள் உங்களுடைய குடும்ப உறுப்பினர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும் சிறிய பிரச்சனைகள் என்றாலும் உடனடியாக சரி செய்து கொள்வது நல்லது.
வேலை பளு அதிகமாக இருக்கும் திடீரென்று அரசாங்க உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடம் மாற்றம் ஏற்படும் குடும்பத்தை விட்டு நீண்ட தூரம் நீண்ட நாட்கள் பிரிந்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
நீங்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட்டால் மட்டுமே தொழிலில் ஏற்படக்கூடிய நஷ்டத்தை சமாளிக்க முடியும் மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.
தனுசு ராசி
தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிக்க அதிர்ஷ்டமாக இருக்கும் பொருளாதார உயர்வு, மகிழ்ச்சி, நீண்ட நாட்களாக தடைப்பட்ட திருமண நிகழ்வு போன்றவை அனைத்தும் நடைபெறும் புதிய வாகனங்கள், வீட்டுமனைகள், நிலங்கள், வாங்குவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது தொழில் தொடங்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.
நீண்ட காலமாக இழுப்பரியில் இருந்து வந்த பரம்பரை சொத்து சம்பந்தமான பிரச்சனைகள் முடிவுக்கு வரும் நீங்கள் வேலை தேடுபவராக இருந்தால் நிச்சயம் புதிய வேலை கிடைக்கும் தொழிலை விரிவுபடுத்த எடுத்து அனைத்து முயற்சிகளும் கைகூடும். மிக்க மகிழ்ச்சியாக இந்த மாதம் உங்களுக்கு அமையும்.
மகரம் ராசி
மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்றத்தாழ்வுடன் இருக்கும் நீங்கள் முதலில் நிதானத்தை கடைப்பிடிக்க கற்றுக் கொள்ளுங்கள் இந்த மாதம் உங்களுடைய பொருளாதாரம் அதிகமான மன அழுத்தத்தை ஏற்படுத்தும் நீங்கள் எதிர்பாராத அளவில் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.
நீங்கள் இந்த மாதத்தில் எந்த முடிவுகளும் எடுப்பதற்கு முன்பு யோசித்து செய்யுங்கள் குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட வேண்டாம் எந்த முடிவிலும் அவசரம் வேண்டாம் பொறுமை வேண்டும்.
தொழில், வேலை, வணிகம், போன்றவற்றில் அதிக முதலீடுகள் செய்ய வேண்டாம் புதிய முயற்சிகள் எடுக்க வேண்டாம் தொழிலை விரிவுபடுத்த எந்த நடவடிக்கைகளையும் செய்ய வேண்டாம் இந்த மாதத்தை நீங்கள் அமைதியாக ஆன்மீகத்துடன் கலந்து செல்லுங்கள் அப்பொழுதுதான் இழப்பீடு இல்லாமல் உங்களால் தப்பிக்க முடியும்.
கும்பம் ராசி
கும்பம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மிகுந்த எச்சரிக்கை தேவை பொருளாதார மிக சிக்கலாக இருக்கும் வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும் திருமண முயற்சிகள் செய்ய வேண்டாம் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியும் சூழ்நிலை இருக்கிறது.
TNPSC தேர்வில் வெற்றி பெற தாவரவியல் முக்கியமான வினா விடைகள்…!
இந்த மாதத்தில் நீங்கள் எந்த ஒரு புதிய முயற்சிகளையும் செய்ய வேண்டாம் வேலை, வணிகம், தொழில் போன்றவற்றில் மந்தமான சூழ்நிலை நிகழும் திடீரென்று சண்டை சச்சரவுகள் ஏற்படும் எதிரிகள் தொல்லை அதிகமாகும் யாரிடமும் உங்களுடைய மனப் பிரச்சனைகளை சொல்ல வேண்டாம்.
மீனம் ராசி
மீனம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் பொருளாதாரம் எதிர்பார்த்த அளவில் இருக்காது பண வரவுகள் தடைபடும் கடன் வாங்குவதை தவித்துக் கொள்ளுங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
நீங்கள் இந்த மாதம் அமைதியை கடைப்பிடித்து வாருங்கள் தொழிலில் புதிய முயற்சிகள் வேண்டாம் வேலை செய்யும் இடத்தில் கடுமையான மன அழுத்தம் ஏற்படும் வணிகத்திலும் மந்தமான சூழ்நிலை நிகழும்.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |