கோவை மாநகராட்சி பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் மது அருந்திய வீடியோ..!11th class students consumed alcohol in Covi Corporation School

11th class students consumed alcohol in Covi Corporation School

கோவை மாநகராட்சி பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் மது அருந்திய வீடியோ வெளியாகி கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது..!

தமிழகத்தில் 2022 ஆம் ஆண்டுக்கு பிறகு மெல்ல மெல்ல போதை பொருள் புழங்குவது அதிகமாகியுள்ளது தற்போது கஞ்சா, மெத்தமைன், உள்ளிட்ட போதைப்பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்று.

சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் எதிர்க்கட்சித் தலைவர்களும் இடதுசாரி கட்சிகளும் தெரிவிக்கிறது சமீப காலமாக பல கோடி மதிப்புடைய போதைப்பொருள் தமிழகத்தில் கைப்பற்றப்பட்டு வருகிறது என்ற செய்தியும் வெளி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை கீளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 6 கிலோ மெத்தமைன் என்கின்ற போதை பொருள் காவல் துறையால் பறிமுதல் செய்யப்பட்டது இதனுடைய மதிப்பு 70 கோடி.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு திமுகவின் அயலக அணி தலைவர் 2500 கோடி ரூபாய்க்கு போதைப்பொருள் கடத்தினார் என்று போதைப் பொருள் பிரிவு காவல் துறை அவரை கைது செய்தது எங்கு பார்த்தாலும் போதை பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது.

என்று பத்திரிகைகளிலும் செய்திகள் வெளி வருகிறது குறிப்பாக கடந்த 2023 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 23 நபர்கள் உயிரிழந்தார்கள் இந்த ஆண்டு கள்ளச்சாராயம் குடித்து 69 நபர்கள் உயிரிழந்து உள்ளார்கள் இப்படி போதை பொருட்களால் பல்வேறு உயிர்கள் பிரிகிறது.

போதை பொருளை கட்டுப்படுத்த வேண்டும் என்று மக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறார்கள் ஆனால் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுத்ததில்லை தற்போது அதைவிட மிகப்பெரிய அதிர்ச்சி செய்தி வெளிவந்துள்ளது.

கோவையில் 11ஆம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் உடற்கல்வி பாடத்திட்டத்தின் போது வகுப்பறையில் உட்கார்ந்து குளிர்பானத்தில் மது கலந்து குடிக்கும் வீடியோ வெளியாகி கடுமையான அதிர்ச்சியை தமிழகம் முழுவதும் ஏற்படுத்தியுள்ளது.

பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடுமையான கண்டனங்களை ஆளும் கட்சிக்கு தெரிவித்து வருகிறார்கள் ஏற்கனவே ஆளும் கட்சி போதை பொருளை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது தற்போது இதுபோன்ற சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருவதால் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது ஆளும் கட்சி.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழக தலைவர்

டி தினகரன் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி குறிப்பில் கோவையில் மாநகராட்சி பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் 3 மாணவர்கள் குளிர்பானத்தில் மது கலந்து குடிக்கும் வீடியோ வெளியாகியது அதை பார்த்த பின்பு எனக்கு கடுமையான அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது.

எதிர்கால பிள்ளைகள் ஏன் இப்படி போதைப்பொருள் கலாச்சாரத்திற்கு அடிமையாகி உள்ளார்கள் என்பது கேள்விக்குறியாக உள்ளது அரசு இதனை கட்டுப்படுத்த தவறிவிட்டது எங்கு பார்த்தாலும்.

குரூப் 2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா அதிக கட் ஆப் மதிப்பெண்கள் பெற வேண்டுமா கணிதம் முந்தைய வினா விடைகள்..!

தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது, உடனடியாக அரசு தலையிட்டு போர்க்கள அடிப்படையில் போதைப்பொருள் கட்டுப்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.

JOIN OUR GROUPS

WHATSAPP CLICK HERE
TELEGRAM CLICK HERE

Leave a Comment