10000 rupees fine for DMK executive who drove car dangerously
திமுக கொடி கட்டிய காரில் கெத்து வலம் வந்த திமுகவினர் கொத்தாக தூக்கிய தமிழக காவல்துறை..!
கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக கொடி கட்டிய காரில் சாலையில் இளைஞர்கள் சிலர் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டார்கள் இது பற்றிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது.
காரை ஓட்டிய இளைஞர்களை பிடித்துள்ள போலீசார் அவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்கள் திமுக கொடி கட்டிய காரில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சில இளைஞர்கள் பயணம் மேற்கொண்டு உள்ளார்கள்.
இந்த நிலையில் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் புகார் கொடுத்த ஹேம்நாத் குமார் பற்றிய காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்துள்ளார்கள் அவருடைய வீட்டு முகவரி போன்ற தனி நபர் விவரங்களை கேட்டு மிரட்டும் வகையில் பேசி வருவதாக அதிமுகவினர் புகார் தெரிவித்துள்ளார்கள்.
இது பற்றிய அதிமுகவின் IT Wing நிர்வாகிகள் தெரிவித்த கருத்துகளில் காலம் மாறும் ஆட்சி மாறும் தமிழக காவல்துறை இப்படி நடந்து கொண்டால் நிச்சயம் எங்களுடைய ஆட்சி வரும் அப்பொழுது நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்றும் பேசியுள்ளார்கள்.
நாம் தமிழர் கட்சி, பாஜக, உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் TTF வாசன் காரில் செல்போனில் பேசிக்கொண்டு பயணம் செய்ததற்கு கைது செய்தீர்கள் இப்பொழுது திமுக நிர்வாகிகள் இப்படி ஆபத்தான முறையில் வாகனத்தை இயக்குகிறார்கள்.
அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் இல்லை என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவிட்டு அதனை அதிகமாக பகிர் செய்தார்கள் ஒரு நாள் முழுவதும் இந்த வீடியோ பற்றிய கருத்துக்கள் அதிகமாக பகிரப்பட்டது உடனடியாக காவல்துறைக்கும் புகார் கொடுக்கப்பட்டது.
தற்போது காவல்துறை விசாரித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து உள்ளார்கள் என செய்திகள் வெளி வருகிறது காரின் நம்பரை வைத்து விசாரித்த போது காரை இயக்கியது திமுக நிர்வாகி நவீன் என்பதும் தனது நண்பர்களுடன் சேர்ந்து மேலும் பல கார்களில் அட்டகாசம் செய்து.
விஜயின் மாநாட்டிற்கு இடம் கொடுக்க மறுக்கும் உரிமையாளர்கள் உச்சகட்ட ஆத்திரத்தில்..!
அதனை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதும் தெரியவந்துள்ளது தற்போது எடுக்கப்பட்டிருக்கும் அந்த வீடியோ கடந்த சில நாட்களுக்கு முன்பு மீஞ்சூர் வண்டலூர் வெளிவட்ட சாலையில் செங்குன்றம் பகுதியில் எடுத்தது நவீன் மற்றும் அவரது நண்பர்களை பிடித்து.
விசாரணை மேற்கொண்ட காவல்துறை அவர்கள் மீது வழக்கு பதிவு செய்துள்ளார்கள் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வகையில் வாகனத்தை இயக்கியதாக 10000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
JOIN OUR GROUPS
CLICK HERE | |
TELEGRAM | CLICK HERE |